பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், 50 Mbps வேகத்தில் 1TB வரை அதிவேக டேட்டா வழங்கப்படும். ஃபேர்-யூஸ்-பாலிசி (FUP) பயன்பாட்டுக் கொள்கை தரவைப் பயன்படுத்திய பிறகு, இதில் இருக்கும் 1 TB, மாதம் முழுவதும் 2 Mbps ஆகக் குறையும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இதில் 200 ஜிபி டேட்டாவுடன் 50 எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது டேட்டா வரம்பு 1TB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, BSNL  பயனர்களுக்கு இலவச குரல் அழைப்பு இணைப்பும் வழங்கப்படுகின்றது. இது கூடுதல் கட்டணமின்றி வரம்பற்ற வாய்ஸ் காலிங் நன்மைகளுடன் கிடைக்கும்.


பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம் 1TB டேட்டாவை வழங்குகிறது


கேரளா டெலிகாமின் அறிக்கையின்படி, BSNL அதன் பான் இந்தியா திட்டமான ரூ 499 பிராட்பேண்ட் திட்டத்திலிருந்து 100 ஜிபி டேட்டா சலுகையை நவம்பர் 2021 இல் நீக்கியது. இதைத் தொடர்ந்து, அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், கேரளாவிற்கு மட்டும் திட்டங்களை (Recharge Plans) அறிவித்தது. இதில் பயனர்களுக்கு ரூ.499 க்கு 200 ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. 


ALSO READ | BSNL Recharge Plan, 500 ரூபாய்க்குள் இத்தனை நன்மைகளா 


திட்டம் கேரள வட்டத்திற்கு மட்டுமே


வெளியீட்டின் மற்றொரு அறிக்கையானது ரூ. 499 பிராட்பேண்ட் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இது இப்போது 1TB டேட்டா மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நன்மைகளையும் வழங்கும். இந்த திட்டம் கேரள டெலிகாம் வட்டத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் வேறு எந்த கூடுதல் நன்மைகளும் வழங்கப்படவில்லை.


ஏர்டெல்லின் திட்டமும் சிறப்பாக உள்ளது


பார்தி ஏர்டெல்லின் (Airtel)  ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்துடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல்லின் இந்த திட்டம் அதிக வேகத்தை வழங்குகிறது. இருப்பினும், ஏர்டெல் திட்டமான  ஏர்டெல் தேங்க்ஸ், பலவித நன்மைகளுடன், 3.3TB மாதாந்திர FUP டேட்டாவுடன் வருகிறது. இது BSNL வழங்குவதை விட மிக அதிகமாகும். 


ஆகையால், நீங்கள் 1TB டேட்டா மட்டுமே தேவைப்படும் நபராக இருந்தால், கேரளாவில் BSNL இன் பிராட்பேண்ட் திட்டமான ரூ.499 சரியான தேர்வாக இருக்கும். இருப்பினும், நீங்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால், 40 Mbps வேகத்தில் வேலை செய்ய முடியும் என்றால், ஏர்டெல்லின் திட்டமும் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.


ALSO READ | Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR