புதுடெல்லி: இந்தியாவில் தனது வீடியோ அடிப்படையிலான செயலியான Tik Tok-ன் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Reliance Industries-சும் ByteDance நிறுவனமும் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் உரையாடல்களைத் தொடங்கின. இன்னும் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த ஊடக கோரிக்கைகளுக்கு ரிலையன்ஸ், பைட் டான்ஸ் மற்றும் டிக்டோக் என எந்த நிறுவனமும் உடனடியாக பதிலளிக்கவில்லை.


சீனாவுடனான எல்லை பதட்டங்களுக்குப் பின்னர் அதன் “இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்” அச்சுறுத்தியதற்காக இந்திய அரசாங்கம் டிக்டோக் மற்றும் WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது.


கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவை தளமாகக் கொண்ட மெசேஜிங் பயன்பாடான WeChat மற்றும் டிக்டோக் உரிமையாளர்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும், விரைவில் இவை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


ALSO READ: 45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்


வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்-கின் அமெரிக்க செயல்பாடுகளைப் பெற Microsoft Corp பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


சமூக ஊடக தளமான Twitter Inc, Tik Tok-குடன் ஒப்பந்தம் செய்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது என இந்த விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்தன.


ALSO READ: Microsoft, Tik-Tok டீலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு பங்கு வேண்டும்: Trump-ன் வினோத கோரிக்கை!!