தேர்தல் நடைமுறைகளில் சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஜென்டினா நாட்டின் சலாடா நகரில் நடைபெற்ற G20 டிஜிட்டல் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்... 


"சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஜனநாயக நடைமுறைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளினல் ஈடுப்படுபவர்களை தடுக்கவும், தண்டிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



கடந்த சில மாதங்களாக சமூக வலைதள நடவடிக்கைகளை அரசு கண்காணித்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 


பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக அண்மையில் CBI முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது" என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.