புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் இருக்கின்றதா, அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 அடுத்த மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது. அந்த வரலாற்று வெற்றியைக்காண இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை காலை விண்கலம் சந்திரயான் -2 சந்திர சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தபோது விண்வெளி உலகில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்றது. இந்திய விண்வெளி ஏஜென்சி இஸ்ரோ செவ்வாய்க்கிழமை காலை 9:02 மணிக்கு திரவ இன்ஜினை இயக்கி சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணியை நிறைவு செய்தது.  நாளை(ஆகஸ்ட் 21), ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ல் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் -2 விண்கலத்தின் திசை 4 முறை மாற்றப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் நாளை பகல் 12.30 மணி முதல் 1.30 மணிக்குள் சந்திராயன்-2ன் திசை மாற்றப்படுகிறது.


4 முறை திசையை மாற்றிய பிறகு 100 கி.மீ.., தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன்- 2 அடையும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சந்திராயன்- 2ல் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை இரண்டு முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர், செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும். இந்த வரலாற்று வெற்றியைக் காண பிரதமர் மோடியை இஸ்ரோ அழைத்துள்ளது.