Cheapest Smartphones: இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது. அம்சங்கள் அதிகமாக இருந்தால் விலையும் அதிகமாக உள்ளது. விலை குறைவான ஸ்மார்ட்போன்களின் தரம் சரியாக இருப்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த கேமரா முதல் வலுவான பேட்டரி வரை உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


ரெட்மி நோட் 10டி


128ஜிபி உள் சேமிப்புடன், இந்த ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி பிரதான சென்சார் கேமராக்கள் மற்றும் 6.5 இன்ச் முழு எச்டி+ திரையுடன் வருகிறது. அமேசானில் இந்த ரெட்மி போனை ரூ.16,999க்கு வாங்கலாம்.



ரியல்மி நார்சோ 30


இந்த Realme ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் முக்கிய சென்சார் 48MP கொண்டது. வலுவான 5,000mAh பேட்டரி மற்றும் 30W சார்ஜருடன், இந்த ஃபோன் 64GB உள் சேமிப்புடன் வருகிறது. பிளிப்கார்டில் இதை ரூ. 14,499க்கு வாங்கலாம்.



ALSO READ:ரூபாய் 7000க்கு குறைவான விலையில் Xiaomi இந்த Smartphone 


போக்கோ எம்3 ப்ரோ 5ஜி


இந்த Poco 5G ஸ்மார்ட்போன் 8MP முன்பக்க கேமரா, 48MP பிரதான சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு, 5,000mAh பேட்டரி மற்றும் 128GB சேமிப்பகத்துடன் வருகிறது. பிளிப்கார்டில் இதை 16,499 ரூபாய்க்கு வாங்கலாம்.



ஓப்போ ஏ74 5ஜி


வலுவான 5,000mAh பேட்டரி மற்றும் 48MP பிரைமரி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போனை Amazon இல் வாங்கலாம். இதன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.17,990 ஆகும்.



ரியல்மி 8 5 ஜி


ரியல்மியின் (Realme) இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே, 16எம்பி செல்ஃபி கேமரா, 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,499-க்கு வாங்கலாம்.



ALSO READ: Bumper Offer! iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR