Royal Enfield: அதிரடி விற்பனை செய்து சாதனை, அதிகமாக வாங்கும் கஸ்டமர்ஸ்
Royal Enfield Best Selling Bike: ராயல் என்ஃபீல்டு பைக் மற்ற பைக்குகளுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆம்!! மற்ற பைக்குகளுக்கு இது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகம் விற்பனையாகும் பைக் - ராயல் என்ஃபீல்டு : இந்திய சந்தையில் 350 சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டின் மிகவும் நேர்த்தியான, வலுவான பைக்காக உள்ளது. இந்த நிறுவனத்தின் பைக்குகள் அதிகம் வாங்கப்படுகின்றன. இதுவரை நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகியவை அதிக அளவில் வாங்கப்பட்டன. ஆனால் சில காலத்திற்கு முன்பு வந்த ராயல் என்ஃபீல்டு பைக் மற்ற பைக்குகளுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆம்!! மற்ற பைக்குகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ள அந்த பைக் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகும். இது நிறுவனத்திற்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று தோன்றும் வகையில் அசாத்தியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் மாதத்தில் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 அனைத்தையும் விட அதிகம் விற்பனையான பைக்காக உள்ளது. இதன் 24,466 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் மார்ச் மாதத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இதன் 10,824 யூனிட்கள் விற்பனை ஆகின. இந்த இரண்டு பைக்குகளும் விற்பனையில் நிறுவனத்தின் மற்ற அனைத்து மாடல்களையும் விஞ்சியுள்ளன. இவற்றை அடுத்து ராயல் என்ஃபீல்டு புல்லட் விற்பனையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Royal Enfield: விலை
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 தற்போது நிறுவனத்தின் விலை மலிவான பைக் ஆகும். இது மூன்று வகைகளில் விற்கப்படுகிறது - ஃபேக்டரி (பிளாக் மற்றும் சில்வர்), டாப்பர் (கிரே, ஏஷ் மற்றும் ஒய்ட்) மற்றும் ரெபெல் (ரெட், பிளாக் மற்றும் ப்ள). ஃபேக்டரி வேரியன்ட் ரூ.1,49,900க்கும், மிட்-ஸ்பெக் டாப்பர் வேரியன்ட் ரூ.1,66,900க்கும், டாப்-எண்ட் ரெபெல் மாடல் ரூ.1,71,900க்கும் கிடைக்கின்றன. இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாகும்.
மேலும் படிக்க | ஷாங்காய் ஆட்டோ ஷோ 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள்
Royal Enfield: மைலேஜ்
ஹண்டர் 350 பைக்கில் 349சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 மற்றும் மீடியர் 350 ஆகியவற்றிலும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2PS பவரையும், 27Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இது ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 13 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இது நகரத்தில் 40.19 கிமீ/லி மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35.97 கிமீ மைலேஜையும் தருகிறது.
Royal Enfield: அம்சங்கள்
இதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த பைக்கில் செமி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டமும் உள்ளது. இது ஓடோமீட்டர், ஃப்யூல் கேஜ், ட்ரிப் மீட்டர் (A&B) மற்றும் பேஸ் பேக்டரி வேரியண்டில் பராமரிப்பு இண்டிகேட்டர் கொண்ட சிறிய டிஜிட்டல் இன்செட் உடன் வருகிறது. மிட்-ஸ்பெக் மற்றும் ஹை-எண்ட் வகைகளில் ஒரு பெரிய டிஜிட்டல் இன்செட் கிடைக்கிறது.
இதில் கியர் பொசிஷன் இண்டிகேட்டரும் அடங்கும். சுவிட்ச் கியரில் ஒரு ரெட்ரோ தோற்றமுடைய ரோட்டரி சுவிட்ச் க்யூப் மற்றும் இடது சுவிட்ச் கியூப் பொருத்தப்பட்ட USB போர்ட் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. மறுபுறம், அடிப்படை மாறுபாட்டில் யுஎஸ்பி போர்ட் இல்லாமல் ஒரு சுவிட்ச் கியர் கிடைக்கிறது.
மேலும் படிக்க | சம்மரில் பைக் பயணமா? இந்த பைக் ரைடிங் டிப்ஸ் உங்களுக்கு உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ