பயனர் தரவுகளை பாதுகாக்குமாறு Facebook-க்கு கொலம்பியா எச்சரிக்கை!
பயனர் தரவுகளை பாதுகாக்க அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த FACEBOOK நிறுவனத்திற்கு கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது!
பயனர் தரவுகளை பாதுகாக்க அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த FACEBOOK நிறுவனத்திற்கு கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது!
திங்களன்று பேஸ்புக்கிற்கு கொலம்பியா ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் படி ஆண்டியன் நாட்டில் பயனர்களின் தனிப்பட்ட தரவை சிறப்பாகப் பாதுகாக்க அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று சிலிக்கான் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்திடம் கூறியுள்ளது.
தனிப்பட்ட தரவுகளை அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடி செய்வதைத் தடுக்க பயனுள்ள மற்றும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது என அதன் வர்த்தக கண்காணிப்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பாதுகாப்பு மேம்பாடுகள், பேஸ்புக் கணக்குகளைக் கொண்ட 31 மில்லியன் கொலம்பியர்களைப் பாதுகாக்க உதவும் என்று SIC குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு எதிரான இதேபோன்ற நடவடிக்கைகளை முன்னர் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம், ஹாலந்து, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை மேற்கொண்டது. இந்த வரிசையில் தற்போது கொலம்பியா இணைந்துள்ளது.
இதனிடையே "பேஸ்புக் போன்ற உலகளாவிய இணைய பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஒரு நிறுவனம்... தரவை செயலாக்குவதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டிய கடமை உள்ளது" என்று SIC தெரிவித்துள்ளது. "நிறுவனம் தனது பயனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இருந்து பின்வாங்கக்கூடாது, இது கட்டுப்பாட்டாளர்களால் கோரப்படுகிறது." என்றும் SIC குறிப்பிட்டுள்ளது.
SIC-ன் கோபத்தை எதிர்கொண்ட முதல் சிலிக்கான் வேலி நிறுவனம் பேஸ்புக் ஊடக தளம் அல்ல. முன்னதாக டிசம்பர் மாதம், ரைட்-ஹெயிலிங் நிறுவனமான Uber, தென் அமெரிக்க நாட்டில் அதன் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது SIC-ன் பார்வை பேஸ்புக் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் வெளிப்புற தணிக்கை நிறுவனம் மூலம் பாதுகாப்பு மேம்பாடுகளை செய்துள்ளதாக பேஸ்புக் சான்றளிக்க வேண்டும், என SIC குறிப்பிட்டுள்ளது.
எனினும் கொலம்பிய கட்டுப்பாட்டாளர்களின் முடிவு குறித்து இதுவரை நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.