தேர்தல் டிக்கெட் வழங்க காங்., வேட்பாளர்களுக்கு நூதன நிபந்தனை...!!
பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக் மற்றும் டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளை கொண்டிருக்க வேண்டும்....!
இனி காங்கிரஸ் வேட்பாளராக புதிய நிபந்தனை: பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக் மற்றும் டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளை கொண்டிருக்க வேண்டும்....!
இந்த ஆண்டுகான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஒரு செய்திகுறிப்பு வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் சுமார் 15 ஆயிரம் லைக், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளையும் (Followers) பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ‘லைக்’ மற்றும் ‘ரிடுவீட்’ செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.