Ola S1 Pro: நாட்டில் மின்சார வாகன சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் அனைத்து வகையான சலுகைகளும் கிடைக்கிறது. இப்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் முன்பணமே கொடுக்காமல் ஸ்கூட்டரை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்கூட்டரை வாங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் பணம் செலுத்த வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுமட்டுமின்றி மேலும் பல சலுகைகளை ஓலா எலக்ட்ரிக், தனது Ola S1 Pro ஸ்கூட்டருக்கு வழங்கி உள்ளது. அப்படி என்ன ஆச்சரியமளிக்கும் சலுகைகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வழங்குகிறது? தெரிந்துக் கொள்ளுங்கள்.


10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி


'டிசம்பர் டு ரிமெம்பர்' (December to Remember) திட்டத்தின் கீழ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்குகிறது. இதன் விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.


மேலும் படிக்க | நவம்பர் மாத கார் விற்பனையில் 111% வளர்ச்சி பெற்ற மாருதி டாடா மலிவு விலை கார்கள்


குறைந்த EMI மற்றும் வட்டி விகிதம்


முன்பணம் கொடுக்கத் தேவையில்லை என்ற ஆஃபருடன், 10,000 ரூபாய் தள்ளுபடி என கவர்ச்சிகரமான சலுகைகளைத் தவிர, குறைந்த EMI மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களையும் வழங்குகிறது ஓலா நிறுவனம். OLA S1 PRO ஸ்கூட்டரை இந்த ஆஃபரில் வாங்கும்போதும் மாதந்திர தவணை (EMI) வெறும் 2,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது, வட்டி விகிதம் 8.99 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.


கிரெடிட் கார்டு இஎம்ஐயில் 5 சதவீதம் தள்ளுபடி


ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் EMI செலுத்தி OLA S1 PRO ஸ்கூட்டர் வான்கினால், 5 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகை குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளில் மட்டுமே கிடைக்கும்.


செயலாக்கக் கட்டணம்கிடையாது


ஓலா எலக்ட்ரிக் கடனில் ஜீரோ ப்ராசசிங் கட்டண திட்டம் வழங்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ், OLA S1 PRO எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது, செயலாக்கக் கட்டணமாக எந்தத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.


மேலும் படிக்க | UPI Transaction Limit: மொபைல்ல பணம் அனுப்புபவரா? இனி கொஞ்சம் கஷ்டம்! யூபிஐ அலர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ