புதுடெல்லி: இந்தியா உட்பட பல நாடுகளில் கிரிப்டோகரன்சி (Crypto Currency) திடீரென பிரபலமாகிவிட்டது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அதில் முதலீடு செய்ய நினைத்தால், காத்திருங்கள். சமீபத்தில், கூகுள் (Google) தனது பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை தடை செய்தது, இது கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக அதனை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோவின் (Trend Micro) அறிக்கையின்படி, 'விளம்பரங்களைக் (Ads) காட்டி சந்தா சேவையை (Subscription Service) வசூலிப்பதன் மூலமும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதன் மூலமும் 8 ஆபத்தான செயலிகள் பயனர்களை மோசடி செய்வதாக விசாரணை கண்டறிந்தது. பணம் செலுத்தப்பட்டவுடன், பயனர்களின் கணக்கு ஹேக் (Account Hack) செய்யப்பட்டது, பின்னர் குண்டர்கள் அவரது கணக்கில் இருக்கும் பணத்தை காலி செய்தனர். ட்ரெண்ட் மைக்ரோ இதைப் பற்றி கூகுள் ப்ளேக்கு அறிவித்தது, அதன் பிறகு அந்த ஆப்ஸ் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது. இருப்பினும், பிளே ஸ்டோரிலிருந்து (Google Playstore) அகற்றப்பட்ட பிறகும், இந்த செயலிகள் உங்கள் தொலைபேசியில் வேலை செய்துகொண்டே இருக்கலாம். எனவே உங்கள் தொலைபேசியைச் சரிபார்த்து, உடனடியாக அந்த செயலிகளை நீக்கவும்.


ALSO READ | Android users alert! உயடியானடியாக இதை செய்யுங்கள், இல்லையெனில்...


இந்த செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்
1. BitFunds - Crypto Cloud Mining
2. பிட்காயின் மைனர் (Bitcoin Miner) – Cloud Mining
3. பிட்காயின் Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
4. கிரிப்டோ ஹாலிக் (Crypto Holic) – Bitcoin Cloud Mining
5. தினசரி பிட்காயின் வெகுமதிகள் (Daily Bitcoin Rewards) – Cloud Based Mining System
6. பிட்காயின் 2021 (Bitcoin 2021)
7. MineBit Pro - Crypto Cloud Mining & btc miner
8. Ethereum Ethereum (ETH) - Pool Mining Cloud


இந்நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக அதனை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மால்வேர் எவ்வளவு ஆபத்தானது என்றால், இது ஆண்ட்ராய்டு போன் செயல்பாட்டையே முடக்கும் அளவுக்கு தீவிரமாக செயல்படுகிறது.


மேலும், இது ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுகிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு போனில் உள்ள தகவல்கள், எஸ்எம்எஸ் மற்றும் போனுக்கு வரும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ALSO READ | Google எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR