நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து, பலர் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் பலர் சாயத் தொடங்கினர். BSNL நிறுவனமும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, 4G நெட்வொர்க் சேவையை விரைவில் நாடு முழுவதும் வலுப்படுத்த முயற்சிக்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 1 லட்சம் டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ இன்னும் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகத்தான் நீடித்து வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, அவ்வப்போது கவர்ச்சிகமான திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகிறது. சுமார் 47 கோடி சந்தாதாரர்களை வைத்துள்ள, ஜியோ தற்போது ஒரு சிறந்த திட்டத்தை கொண்டுள்ளது. இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 9 ரூபாய் செலவழித்தால் போது 2.5 ஜிபி பெறலாம்....


ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance jio Rs.3599 plan)


ஜியோ 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ. 3599 கட்டணம் கொண்ட வருடாந்திரத் திட்டத்தைக் கொண்டுள்ளது, இதில் மாதம் தோறும், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி தவிர தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. எனினும், இந்தத் திட்டத்தில் ஜியோ சினிமா சந்தா பெற தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்...


நாளொன்றுக்கு 9 ரூபாயின் தினம் 2.5ஜிபி டேட்டா


ஜியோ வழங்கும் இந்த வருடாந்திர திட்டத்தில், மாதத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டால், உங்கள் மாதச் கட்டணம் ரூ.276 ஆக இருக்கும். அதாவது நாளொன்றுக்கு 9 ரூபாய் செலவழித்தால் 2.5 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ் எம் எஸ் வசதி கிடைக்கும். 


ஜியோ வழங்கும் AirFiber Freedom திட்டம்


இது தவிர AirFiber Freedom திட்டத்தையும் Jio வழங்குகிறது. இதில் 100 Mbps வேகம் கொண்ட வரம்பற்ற அதிவேக வைஃபை, 13+ OTT இயங்குதளங்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்களுக்கான அணுகல் ஆகியவை அடங்கும். பலம் நன்மைகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தை பெற மூன்று மாதங்களுக்கு ரூ.2,121 கட்டணம் மட்டுமே. ஜியோ ஏர்ஃபைபர் சந்தா திட்டங்கள் ரூ. 599 முதல் ரூ.1,199 வரையிலான கட்டணத்தில் கிடைக்கும். இதில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 1000ஜிபி டேட்டா உடன் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற பிரபலமான OTT தளங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.


மேலும் படிக்க | அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்! ரூ.15000க்குள் சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ