இந்தியாவில் பண்டிகை காலங்களில் அதிக அளவில் ஷாப்பிங் நடக்கிறது. எனவே, ஒவ்வொரு நிறுவனமும் அதன் விற்பனையை அதிகரிக்க விரும்புகிறது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பல நிறுவனங்கள் தள்ளுபடி சலுகை விபரங்களை அறிவித்துள்ளன. கவர்ச்சிகரமான தள்ளுபடி சலுகைகள் காரணமாக குறைந்த விலையில் பொருட்களை வாங்க சிறாந்த வாய்ப்பு கிடைக்கிறது. பண்டிகை கால சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேமிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தீபாவளி விற்பனையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் இயர்பட்களை மலிவான விலையில் விற்பனை செய்கிறது. OnePlus 12, OnePlus Nord 4, OnePlus Nord CE4, OnePlus Watch 2, OnePlus Pad 2 போன்ற தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடியின் பலனை பெற மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


OnePlus தீபாவளி விற்பனையில் தள்ளுபடி சலுகைகளுடன் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் அல்லது இயர்பட்களையும் வாங்கலாம். எந்த ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.


OnePlus தீபாவளி விற்பனை சலுகைகள் விபரம்


OnePlus 12


OnePlus 12 ஸ்மார்ட்போனை ரூ.55,999 விலையில் வாங்கலாம். இந்த போனில் ரூ.2,000 சிறப்பு கூப்பன் மற்றும் ரூ.7,000 உடனடி வங்கி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இதை வாங்கும் போது, ​​உங்களுக்கு OnePlus Buds Pro 3 இயர்பட்கள் இலவசமாக கிடைக்கும்


OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE4


தீபாவளி சலுகை விற்பனையில், OnePlus 4 ஐ ரூ.25,999 என்ற அளவிலான ஆரம்ப விலையில் வாங்கலாம். இதை வாங்கும் போது உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. OnePlus Nord CE4 போனை வாங்கினால், Nord Buds 2r என்னும் இயர் பட்டை இலவசமாகப் பெறுவீர்கள். இது தவிர, ரூ.2,000 தள்ளுபடியும், ரூ.1,500 உடனடி வங்கி தள்ளுபடியும் கிடைக்கும்.


மேலும் படிக்க | ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவை


OnePlus Nord CE4 லைட்


OnePlus Nord CE4 Lite மாடலின் விலை ரூ.16,999  என்ற அளவில் தொடங்குகிறது. இதனுடன், புல்லட் வயர்லெஸ் Z2 இயர்பேண்ட் இலவசமாகக் கிடைக்கிறது. இதுதவிர ரூ.1,000 சிறப்பு கூப்பன் மற்றும் உடனடி வங்கி தள்ளுபடி ரூ.2,000 வழங்கப்படுகிறது.


OnePlus Watch 2


OnePlus Watch 2 வகை ஸ்மார் வாட்சிற்கு 8,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்வாட்சை ரூ.19,999க்கு வாங்கலாம்.


OnePlus Pad 2


OnePlus Pad 2 டேப்லெட்டிலும் சிறந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். இந்த டேப்லெட்டை தீபாவளி விற்பனையில் ரூ.40,999க்கு வாங்கலாம். இதை வாங்குவதன் மூலம் ரூ.7,000 வரை சேமிக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. 


OnePlus Buds


தீபாவளி விற்பனையின் போது, ​​Nord Buds 3 Pro விலை ரூ.2,799. OnePlus Nord Buds 3 மாடலை ரூ.2,299க்கு வாங்கலாம். தள்ளுபடிக்குப் பிறகு, OnePlus Buds Pro 3 இன் விலை ரூ.10,999.


மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ