புதுடெல்லி: இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல சுவாரஸ்யமான சலுகைகளை வழங்கி வருகிறது. Flipkart தற்போது ஒரு சிறப்பு மின்னணு விற்பனையை நடத்தி வருகிறது, இதில் ஸ்மார்ட்போன்கள் முதல் ஏசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் வரை அனைத்து மின்னணு பொருட்களிலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் இந்த விற்பனையின் அத்தகைய ஸ்மார்ட்போன் சலுகையைப் பற்றி காண உள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C11 ஐ மிக குறைந்த விலையில் வாங்கலாம்
Realme C11 இன் ஒரிஜினல் விலை ரூ.9,999 ஆகும். பிளிப்கார்ட்டின் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் (Electronics Sale) இந்த 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.8,999க்கு வாங்கலாம். அதாவது 10% தள்ளுபடி ஆகும். ஆஃபர் (Flipkart Sale) இத்துடன் முடிவடையவில்லை, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் அதாவது ரூ.450 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.8,999ல் இருந்து ரூ.8,549 ஆக குறையும்.


ALSO READ | Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு 


வெறும் ரூ.99க்கு Realme C11
உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக Realme C11 ஐ வாங்கினால், இந்த ஒப்பந்தத்தில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் இருந்து 8,450 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.8,549லிருந்து வெறும் ரூ.99 ஆகக் குறையும்.


இந்த போனின் சிறப்பு என்ன?
4ஜி சேவைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் மெமரி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்க முடியும். ஆண்ட்ராய்டு 11 இல் வேலை செய்யும் இந்த போனில், 6.5 இன்ச் HD + LCD இன்-செல் டிஸ்ப்ளே, 1,600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைப் பெறுவீர்கள். கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமராவுடன் வருகிறது. இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் உடன் வருகிறது.


பிளிப்கார்ட்டின் மின்னணு விற்பனையில் இருந்து இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த விற்பனையின் கடைசி நாள் ஜனவரி 31 ஆகும்.


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR