வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கா... வெயில் காலம் வருவதற்கு இதையெல்லாம் செக் பண்ணுங்க!
Inverter: இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் முறையாக செயல்பட அதனை இப்போது சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும். இன்வெர்ட்டரில் இப்போதே சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
Inverter: குளிர் காலம் முடிந்து கோடை காலம் நெருங்கிவிட்டது. நாட்டின் பல பகுதிகளிலில் இப்போதே வெயிலின் தாக்கமும் அதிகரிக்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் கோடை காலம் அதன் உச்சத்திற்கு வந்துவிடும். கோடை காலம் என்றாலே மின்சார தேவை என்பது அதிகம் தேவைப்படும். குறிப்பாக, மின்விசிறி, ஏசி, ஏர் கூலர், ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களின் பயன்பாடும் அதிகமிருக்கும்.
அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மின்சாரத்தை ஒரே நேரத்தில் அதிகமாக பயன்படுத்தும் போது மின் தட்டுப்பாடு ஏற்படலாம். கோடை காலத்தில் இந்த மின் தட்டுப்பாட்டால் அதிக மின்தடையும் நிலவும். மற்ற காலங்களை போல் இன்றி, கோடை காலத்தில் மின்தடையை சகிக்கவே இயலாது எனலாம். அந்த நேரத்தில்தான் உங்களின் இன்வெர்ட்டர் கோடை வெயிலில் இருந்து உங்களை காப்பாற்றும் எனலாம்.
மின் தடைக்கு ஒரே நிவாரணம்...
மின் தடை ஏற்படும் போது, வீட்டில் இருக்கும் பல மின்விசிறிகளுக்கு ஒரே நேரத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். அதற்கு உங்களின் இன்வெர்ட்டர் சரியான நிலையில் இருக்க வேண்டும். அதன் பயன்பாடு அதிகமில்லாத மற்ற நேரங்களில் அதை முறையாக பராமரிக்காமல் விட்டிருப்போம்.
உங்கள் இன்வெர்ட்டரின் நிலை மோசமான நிலையில் இருந்தால், அதன்மூலம் செயல்படும் சாதனங்கள் முறையாக இயங்காது. எனவேஸ கோடைக்காலம் தொடங்கும் முன் இன்வெர்ட்டரில் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | பெட்ரோல் பங்குகளில் இப்படிலாம் மோசடி நடக்கிறதா? கார் வைத்திருப்போர் ஜாக்கிரதை!
சர்வீஸிற்கு சொல்லிவிடுங்கள்
கோடையில் இன்வெர்ட்டருக்கு அதிக வேலை இருக்கும். இன்வெர்ட்டரை சர்வீஸ் செய்தால் கோடையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படும். இன்வெர்ட்டரை சுத்தம் செய்தல், ஆயில் அளவை சரிபார்த்து அதனை தக்க நேரத்தில் மாற்றுதல் மற்றும் அதுசார்ந்து பிற தேவையான பணிகளை சேவை செய்வது இந்த சர்வீஸில் அடங்கும். இதனை நீங்கள் இன்வெர்ட்டர் வாங்கியவர்களிடமோ அல்லது இதுசார்ந்த பணியாளர்களிடமோ கொடுத்து சர்வீஸ் செய்துகொள்ளலாம்.
பேட்டரி முக்கியம் பிகிலு...
இன்வெர்ட்டரில் முக்கியமான ஒன்று அதன் பேட்டரி. குறிப்பாக, கோடையில் காலத்தில் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். எனவே, பேட்டரி தண்ணீரின் அளவை சரிபார்த்து, தேவைப்பட்டால் தண்ணீரை இப்போதே மாற்றிக்கொள்ளவும். அதுமட்டுமின்றி பேட்டரி டெர்மினல்களை சுத்தம் செய்வதும் நல்லது. பேட்டரியின் சார்ஜிங் திறனையும் சரிபார்த்துக்கொள்ளவும்.
செய்யவே செய்யாதீர்கள்
இன்வெர்ட்டரை ஓவர்லோட் செய்ய வேண்டும். எனவே, இன்வெர்ட்டரில் இருந்து உங்கள் வீட்டின் அத்தியாவசிய உபகரணங்களை மட்டும் இயக்கவும். இன்வெர்ட்டரை அணைக்கும்போது, அனைத்து உபகரணங்களையும் அணைக்க மறந்துவிட வேண்டாம். இன்வெர்ட்டருக்கு அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்கவே கூடாது, உங்களின் குழந்தைகளிடமும் இதனை அறிவுறுத்திவிடுங்கள்.
வயரிங்கை சரிபார்க்கவும்
இன்வெர்ட்டரின் வயரிங்கில் ஏதேனும் குறைபாடு அல்லது சேதம் உள்ளதா என்பதை சரிபார்ப்பதும் அவசியமாகும். குறைந்தபட்சம், தளர்வான இணைப்புகளை இறுக்கிவிடுங்கள். சேதமடைந்த கம்பிகளை மாற்றவிடுங்கள்.
இன்வெர்ட்டரை இந்த இடத்தில் வைக்கவும்...
இன்வெர்ட்டரை உங்கள் வீட்டிலேயே காற்றோட்டமான, ஈரம் இல்லாத மிகவும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக, நேரடியாக சூரிய ஒளி அதன்மீது படும் வகையிலான இடத்தில் இருந்து தள்ளி வைக்கவும். அதனை சுற்றி பரந்தளவில் போதுமான இடத்தை விட்டுவிடுங்கள். இதனால் காற்றோற்றமும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | Wi-Fiல் இன்டர்நெட் மெதுவாக கிடைக்கிறதா? இதன் மூலம் நீங்களே சரி செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ