புது டெல்லி: டிக் டாக் (TikTok) உட்பட சீனாவிலிருந்து 59 பயன்பாடுகளை இந்திய அரசு சமீபத்தில் தடை செய்தது. எனவே இப்போது இணைய மோசடி கும்பல் "டிக் டாக்" செயலியை பயன்படுத்தி உங்கள் தரவுகளை திருட முயற்சித்து வருகின்றனர். ஆம், மோசடி செய்பவர்கள் இப்போது டிக் டாக் என்ற பெயரில் தீம்பொருளை அனுப்புகிறார்கள். தீம்பொருள் என்பது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவைத் திருட இதைப் பயன்படுத்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாரப்பூர்வ டிக்கெட் டேப் பயன்பாடு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், சைபர் கிரைமினல்கள் எஸ்எம்எஸ் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) மெசேஜிங் மூலம் டிக்டாக் புரோ (TikTok Pro) என்ற தீம்பொருளை பரப்புகின்றன. இந்த செய்தியில், "டிக்டாக் வீடியோக்களை மீண்டும் ரசிக்கவும், வீடியோவை உங்களுக்காக உருவாக்கவும் எனக் கூறப்பட்டு இருக்கும். இந்த செய்தியைத் தவிர, டிக்டாக் புரோ APK கோப்பைப் பதிவிறக்க ஒரு இணைப்பு வழங்கப்படுகிறது.


READ MORE | டிக்டாக் தடை... இத்தனை கோடி வருவாய் இழத்த பைட் டான்ஸ்!!


உங்களுக்கு வரும் செய்தியில் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் APK கோப்பைப் பதிவிறக்கும் போது அசல் டிக்டாக் ஐகான் தோன்றும். கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போனில் கேமரா, படம், கேலரி மற்றும் பிற பிரிவுகளை அணுகும்படி கேட்கும். நீங்கள் அனுமதி அளித்த பிறகும் இந்த பயன்பாடு உங்கள் தொலைபேசியில் இயங்காது. ஆனால் அது உங்கள் மொபைலில் இருக்கும்.


இந்த பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் கிடையாது. நீங்கள் APK கோப்பை பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் தொலைபேசி கண்காணிக்கப்படும். எனவே, இதுபோன்ற பயன்பாடுகள் பயனரின் மொபைலில் உள்ள பிற புகழ்பெற்ற கணக்குகளிலிருந்து பயனரின் ஐடியை எளிதில் திருடலாம்.


READ MORE | 36 பயன்பாடுகளை பாதுகாப்பற்றது என Play Store-ல் இருந்து நீக்கியது கூகுள்!


சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா சமீபத்தில் கூகுளுக்கு 25 செயலிகள் குறித்து அறிக்கை அளித்தது. இந்த செயலிகள் மூலம் பயனர் உள்நுழைவு விவரங்களைத் திருடுகின்றன. இதனையடுத்து கூகுள் இந்த பயன்பாடுகளை அதன் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியது.


இந்த 25 பயன்பாடுகள் கூகுள் பிளே (Google Play Store) ஸ்டோரிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு 20 லட்சம் தடவைகளுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த பயன்பாடுகள் ஃபிளாஷ் லைட், வால்பேப்பர், ஸ்கிரீன் ஷாட் போட்டோ எடிட்டிங் மற்றும் வானிலை தகவல் போன்ற சேவைகளை வழங்கும் நோக்கில் உங்களை அணுகுவார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமாகும்.


READ MORE | பிளே ஸ்டோரிலிருந்து கூகிள் நீக்கிய 30+ ஆண்ட்ராய்டு செயலிகள்: ஏன் தெரியுமா?


டிக் டாக் போன்ற எந்த APK கோப்பையும் பதிவிறக்குவதில் இருந்து பயனர்கள் விலகி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சைபர் திருடர்கள் இவற்றின் மூலம் தீம்பொருளை அனுப்ப வாய்ப்புள்ளது.