நியூயார்க்: தூங்கும்போது பயங்கரமான கனவு வந்து வேர்த்துக் கொட்டுகிறதா? இல்லை, இனம் தெரியாத பயம் வந்து மனதை சங்கடப்படுத்துகிறதா? இரவில் தனியாக இருக்க பயமா? காத்து கருப்பு உங்கள் தூக்கத்தை ஸ்வாஹா செய்கிறதா? Don’t worry, be happy, have a good sleep! Apple Watch இருக்க பயம் ஏன்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிள் வாட்ச்-இல் (Apple Watch) உள்ள சென்சார், உடல் இயக்கம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. கண்காணிக்கப்பட்டத் தரவுகள் அனைத்தும் நைட்வேர் (Nightwear) சேவையகத்தில் சேமிக்கப்படும். இந்தத் தரவுகள் பாதுகாக்கப்பட்ட ஒப்பிடப்பட்டு, இந்த ஆப்பிள் வாட்சை பயன்படுத்துபவரின் உறக்கத்தின் தகவல்கள் ஒரு தரவாக பதிந்து வைக்கப்படும்.  


இரவில் தூங்கும்போது பயங்கரமான கனவுகள் வந்தால், அது தூக்கத்தை கெடுத்துவிடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஆப்பிளின் புதிய சாதனம் உதவுகிறது.  அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) (Food and Drug Administration (FDA)) இந்த புதிய சாதனத்தை ஆராய்ந்து பார்த்து தர நிலைகள் அனைத்தையும் உறுதி செய்த பிரகு, விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.


ஆப்பிளின் இந்த புதிய சாதனத்திற்கு நைட்வேர் (Nightwear) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் ஆப்பிள் ஐபோனைப் (Apple iPhone) பயன்படுத்துபவர்கள், நைட்வேர் சேவையகத்துடன் உள்நுழைய முடியும்
உறக்கத்தின் போது கனவுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க இந்த ஆப்பிள் நைட்வேர் உதவியாக இருக்கும். 22 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை மனதில் வைத்து நைட்வேர் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த சாதனம் எவ்வாறு உதவும்?
நம் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தைப் பற்றி அடிக்கடி யோசிக்கிறோம். அதை நினைத்து நாம் மிகவும் வருத்தப்படுகிறோம். மனதில் ஏற்படும் கவலைகள் கனவாக உருவெடுக்கின்றன. சோகங்கள், நமக்கு கெட்ட கனவாகவும், பயமுறுத்தும் கனவாகவும் வருகின்றன. 
கவலையிலும், சோகத்திலும் இருப்பவர்களின் மனம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும். அப்போது வரும் கனவுகள் நம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும். 
இந்த சிக்கல்களை தீர்க்க இந்த சாதனம் உதவும். இது தொடுதல் அடிப்படையிலானதாக இருக்கும், இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான விவரங்களின் அடிப்படையில் தூக்கத்தின் போது மென்மையான அதிர்வு உணர்வைத் தரும்.


நைட்வேரை அணிந்து உறங்கும்போது, ஆப்பிள் வாட்சில் உள்ள சென்சார் உடல் இயக்கம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் நைட்வேர் சேவையகத்தில் சேமிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, நைட்வேரை பயன்படுத்துபவர்களின் பிரத்யேக தூக்க சுயவிவரம் உருவாக்கப்படுகிறது.


ஆப்பிள் வாட்ச் மூலம் அதிர்வுகளை அனுப்பும் இந்த சாதனம்,  கனவு வரும்போதும், இதய துடிப்பு மற்றும் உடல் இயக்கத்தை மதிப்பிடுகிறது. சேமிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் அச்சுறுத்தும் கனவுகளின் தாக்கத்தை உணரலாம். 
இந்த தரவுகள் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் அச்சத்தில் இருந்து வெளியே வருவதற்கான உத்திகள் வகுக்கப்படும். இந்த அற்புதமான சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பாடுகிறது.


Read Also | பெண்கள் வேட்டையிலும் சிறந்தவர்களா?  9000 ஆண்டு புதைகுழி சொல்லும் சரித்திரம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR