யூடியூப், ஜிமெயில் உட்பட கூகுளின் சேவைகள் இந்தியாவில் முடங்கியதா?
ஜிமெயில் (Gmail), யூடியூப் (YouTube) மற்றும் கூகுள் தேடல் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பலவும், சில பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. தெரிகிறது. டவுன்டெக்டர் (Downdetector) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா: ஜிமெயில் (Gmail), யூடியூப் (YouTube) மற்றும் கூகுள் தேடல் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பலவும், சில பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. #YouTubeDOWN என்ற டேக், டிவிட்டரில் டிரெண்டிங் ஆகிறது.
டவுன்டெக்டர் (Downdetector) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
யூடியூப்பை அணுகுவதில் சிக்கல் இருப்பதாக சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் புகாரளித்திருப்பதாக டவுன்டெக்டர் கூறுகிறது. Gmail மற்றும் YouTube இலும் செயலிழப்பு விஷயம் அறிவிக்கப்பட்டது.இது குறித்து பல பயனர்கள் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, Google Play, Google Maps, Google Hangouts, Google Duo, Google Meet என பல சேவைகளும் பலருக்கு கிடைக்கவில்லை.