50 முதல் 60 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் -அதன் சிறப்பு அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய்க்குள் எலக்ட்ரிக் டூவீலரை வாங்க நினைத்தால், சில சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
இந்திய சந்தையில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. பல புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. நீங்கள் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய்க்குள் எலக்ட்ரிக் டூவீலரை வாங்க நினைத்தால், சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். மேலும் இந்த ஸ்கூட்டர்களின் அம்சம், பேட்டரி சார்ஜிங் நேரம், விலை போன்றவற்றைப் பற்றிய தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
ஹோப் ஜெலியோஸ் (Electric scooter Geliose Hope): இந்த இரு சக்கர வாகனத்தின் மொத்த விலை ரூ. 46,999 (ஆன் ரோடு- டெல்லி). இதன் பேட்டரி கையடக்கமானது. இது இணையத்துடன் இணைக்கப்பட்ட இரு சக்கர வாகனம். முழு பேட்டரி சார்ஜில் 75 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம். இதில் நீங்கள் ஒரு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ட்ரிப்மீட்டரைப் பெறுவீர்கள். அதில் BLDC (Brushless DC Electric Motor) கொடுத்துள்ளது. சிறப்பு என்னவென்றால், மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். இதன் காரணமாக இந்த ஸ்கூட்டரரை ஓட்டுவதற்கு பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் கூட தேவையில்லை. இதன் பேட்டரி 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்கூட்டரரை IIT கீழ் இயங்கும் ஜெலியோஸ் மொபைலிட்டி நிறுவனம் தயாரித்துள்ளது.
ALSO READ | Ola S1, S1 Pro-வின் விற்பனை இன்று முதல் துவக்கம்: EMI, நிதி உதவி, பிற தகவல்கள் இதோ!!
HCD இந்தியா NPS கார்கோ (HCD India NPS Cargo): இந்த இரு சக்கர வாகனத்தின் மொத்த விலை ரூ .58,500 (ஆன் ரோடு- டெல்லி). இது பிரஷ் இல்லாத டிசி மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளது. இதில் முன்புற டிஸ்க் பிரேக்குகளையும், பின்புற பிரேக் டிரம் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ட்ரிப்மீட்டர் வசதியும் உள்ளது. அதிவேக சார்ஜிங் பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது ஒருமுறை பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை ஓட்ட முடியும். இதன் பேட்டரி 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
கபிரா மொபிலிட்டி kollegio (Kabira Mobility Kollegio): ஸ்டார்ட்-அப் நிறுவனமான கபிரா மொபிலிட்டி எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கோவாவை சேர்ந்தது. இந்த ஸ்கூட்டரின் மொத்த விலை ரூ. 45,990 (ஆன் ரோடு விலை, டெல்லி). இதில் நீங்கள் உயர் செயல்திறன் அதிர்ச்சி உறிஞ்சி, ஸ்மார்ட் EV கட்டுப்படுத்தி, டிஜிட்டல் டாஷ்போர்டு, பிரகாசமான LED ஹெட்லேம்ப் பெறுவீர்கள். இந்த வாகனத்தின் மோட்டார்கள் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. ஒருமுறை பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
ALSO READ | Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR