ராக்கெட் மூலம் நிலாவுக்கு பயணம் செய்யப்போகும் முதல் நபரை ஸ்பேஸ்X நிறுவனம் அறிவித்துள்ளது....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2023 ஆம் ஆண்டில் நிலவுச் சுற்றுலாப்பயணத் திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதன் முதலாக நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லப் போகும் நபர் யார்? என்ற கேள்விக்கு தற்போது ஸ்பேஸ் எக்ஸ் விடை கொடுத்துள்ளது.



ஜப்பானின் ஆடை நிறுவனமான ஸோஸோவின் நிறுவனர் யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தான் நிலவுச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள முதல் பயணி ஆவார். லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதை அறிவித்தார்.