இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் எரிக்சன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்களிடையே தற்சமயம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த 5ஜி தொழில்நுட்பம் 2020-ம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இவற்றின் செயல் விளக்கம் நாட்டின் வலுவான 4ஜி சுற்றுச்சூழலை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என எரிக்சன் நிறுவன துணை தலைவர் தகவல் மிர்டிலோ தெரிவித்தார். மேலும் உலகம் முழுவதும் 36 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என எரிக்சன் நிறுவன துணை தலைவர் தகவல் மிர்டிலோ தெரிவித்தார்.