EU-US தனியுரிமை தரவு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஐரோப்பிய உச்ச நீதிமன்றம்
அண்மையில் இந்தியா 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தபோது, கூறிய கருத்துக்கு வலு சேர்க்கும் ஐரோப்பாவின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு
அட்லாண்டிக் பகுதி முழுவதிலும் உள்ள ஐரோப்பியர்களின் தனிப்பட்ட தரவை வணிக பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய ஒப்பந்தத்தை ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று நிராகரித்தது. இருப்பினும், சர்வதேச நிலையில் தரவை பரிமாறுவதற்கு நூறாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்படுத்தும் மற்றொரு ஒப்பதத்தின் செல்லுபடியை உறுதி செய்தது.
2016/1250 என்று குறிப்பிடப்படும் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க தரவு பாதுகாப்பு கேடயம் (EU-US Data Protection Shield) வழங்கிய பாதுகாப்பின் மீதான சந்தேகத்தின் பின்னணியில் வெளியான இந்த முடிவானது, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிகத்தில் பல்வேறு சட்ட குழப்பங்களை ஏற்படுத்தும்.
அமெரிக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் ஐரோப்பியர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது என்று கூறிய ஐரோப்பிய தனியுரிமை நீதிமன்றம், "தனியுரிமை கேடயம்" (Privacy Shield) என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தை செல்லாததாக்கிவிட்டது.
"வேறு ஒரு நாட்டில் அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளில் நிறுவப்பட்ட processorகளுக்கு தனிப்பட்ட தரவை மாற்றுவதற்கான நிலையான ஒப்பந்தத்தின் (2010/87) விதிமுறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு செல்லுபடியாகும்" என்று நீதிமன்றம் கருதுகிறது.
Facebook மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தனியுரிமை ஆர்வலர் மேக்ஸ் ஷ்ரெம்ஸ் (Max Schrems) இடையிலான வழக்கில் இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளானது. தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த Max Schrems "இது சரியான முடிவாகத் தெரிகிறது" என்று கூறினார். வியன்னாவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து பேசிய Max Schrems தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
Read Also | டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை
ஐரோப்பிய ஆணையத்தின் "தனியுரிமைக் கேடயம்" என்ற முடிவை CJEU ரத்து செய்துள்ளது, இது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தரவுகளை அமெரிக்க வழங்குநர்களுக்கு எளிதில் மாற்றுவதற்கு "outsource" முறை மூலம் அனுமதித்தது" என்று தன்னார்வு தொண்டு நிறுவனம் NOYB வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. Max Schrems, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்க நபர்களை" மட்டுமே பாதுகாக்கும் அமெரிக்க கண்காணிப்பு சட்டங்களை மீறுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை" என்று NOYB கூறுகிறது.
சமூக ஊடக தளங்கள், ஐரோப்பிய தனியுரிமை ஒழுங்குமுறை ஜிடிபிஆர் (European privacy regulation GDPR)ஐ மீறி, தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டி Max Schrems வழக்குக் தொடுத்திருந்தார்.
அண்மையில் இந்தியா 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அப்போது, பாதுகாப்பு காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக இந்திய அரசு கூறியிருந்த கருத்துக்கு ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வலு சேர்க்கிறது.