அமேசான் டீல் ஆஃப் தி டே: அமேசானின் டீல் ஆஃப் தி டேயில் பல தயாரிப்புகளை மிக மலிவாக வாங்க முடியும். இன்றைய சலுகையில், ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் மக்கள் வாங்குகின்றனர். இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி வரும் என கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. நீங்களும் 5G போனை வாங்க திட்டமிட்டிருந்தால், Amazon டீல் ஆஃப் தி டே உங்களுக்கு மிகவும் பயன்படும். OPPO A74 5G போனை மிகவும் மலிவாக வாங்க முடியும்.


மேலும் படிக்க | விளம்பரத்துக்கு ’நோ’ சொல்ல கூகுளின் புதிய திட்டம் 


OPPO A74 5G சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


OPPO A74 5G 6GB RAM + 128GB சேமிப்பக மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.20,990. ஆனால் இந்த போன் Amazon  ஆன்லைன் விற்பனை தளத்தில் ரூ.17,990க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இதன் காரணமாக ஸ்மார்ட் போனின் மேலும் விலை கணிசமாக குறையும்.


அமேசான் டீல் ஆஃப் தி டே: OPPO A74 5G எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


OPPO A74 5G போனிற்கு  ரூ.14,900 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்களது பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொள்வதன் மூலம் இவ்வளவு சலுகைகளைப் பெறலாம். ஆனால் உங்கள் பழைய போனின் நல்ல நிலையிலும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.14,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். பழைய போன் நல்ல நிலையில் இல்லை என்றால், அதற்கு குறைவான தொகையே கிடைக்கும். முழுமையாக அனைத்து சலுகைகளும் கிடைத்தால், இந்த போனை பெற நீங்கள் ரூ.3090 செலுத்தினால் போதும்.


Oppo A74 5G போனின் அம்சங்கள்


இது 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் பிக்சல் ரெசயூஷன் 2400x1080. இதன் ஸ்கீரின் மற்றும் பாடி  விகிதம் 90.5 சதவீதம். இதன் பிக்சல் அடர்த்தி 405 PPI ஆகும். இந்த ஃபோனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி உள்ளது 2 ஜிகாஹெர்ட்ஸ் வரை கிளாக் ஸ்பீட் உள்ளது. இதில் கிராபிக்ஸ் பணிக்காக Adreno 619 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது.


மேலும் படிக்க |  Flipkart Big Bachat Dhamal விற்பனை நாளை; எக்கசக்க தள்ளுபடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR