பயனர்களில் தகவல் திருட்டு விவகாரத்தில் சிக்கிய பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 35 ஆயிரம் கோடி) அபராதம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய பேஸ்புக், ரூபாய் 35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்தவும், பயனர்களின் தனி விவரங்களை பாதுகாக்க குழு அமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.


முன்னதாக தேர்தல் சமையத்தின் போது பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம், எட்டரை கோடி பேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண்கள், தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட விவரங்களை முறைகேடாக அணுகியதாக புகார் எழுந்தது.


இதுதொடர்பாக அமெரிக்க அரசின் மத்திய வர்த்தக ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவே, சமரச அடிப்படையில் 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.


மேலும் பயனர்களின் தகவல்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை 3 மாதத்திற்கு ஒரு முறை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காக குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் சமரச உடன்படிக்கையில்  இடம்பெற்றது.


இந்நிலையில் தற்போது மத்திய வர்த்தக ஆணையத்தின் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பேஸ்புக் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இது ஒருபுறமிருக்க, தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க தவறியதற்காக, பேஸ்புக்கிற்கு, பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் 690 கோடி ரூபாய் அபராதம் விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.