அமெரிக்கா ஒன்றியத்தின் இடைக்கால தேர்தல் வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 115 கணக்குகளை முடக்கியுள்ளது facebook!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்கனின் தகவல்களை கசித்த விவகாரம் உள்பட பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள பேஸ்புக் சமீப காலமாக வணிக ரீதியாகவும் பலத்த அடியை சந்தித்து வருகிறத். தேர்தல் தலையீடு, தகவல் திருட்டு என அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும் நிலையில் தற்போது அமெரிக்கா ஒன்றியத்தில் நடைப்பெறவுள்ள தேர்தலில் ஊடகத்தின் தாக்கத்தினை குறைக்கும் வகையில் 30 facebook கணக்குகளையும், 85 Instagram கணக்குகளையும் facebook நிறுவனம் முடக்கியுள்ளது.


இதுகுறித்து facebook நிறுவனம் தெரிவிக்கையில்... வெளிநாட்டு நிறுவனங்களுடன் முடக்கப்பட்ட கணக்குகள் தொடர்பில் இருப்பதினை அறிந்த US சட்ட அமலாக்க துறை யின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



அமெரிக்க ஒன்றியத்தின் முக்கியமான தேர்தல்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தேர்தலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்கள் என்ன செய்தோம் என்பதினை மக்களுக்கு தெரியபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக facebook தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.


முடக்கப்பட்ட 115 கணக்குகளின் தகவல்கள் பிரஞ்ச் மற்றும் ரஷ்ய கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் இந்த கணக்குடன் தொடர்புடைய விவரங்கள் ஆங்கில நிறுவனங்களில் இருந்ததாகவும் facebook சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த குறிப்பிட்ட கணக்குகள் ரஷ்யவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இணைய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அந்த இணைப்பு தேர்தல்களை பாதிக்கமா என்ற கோணத்திலும் facebook ஆய்வு மேற்கொண்டு வருகிறது!