உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை நேற்றிரவு சிறிது நேரம் முடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்களின் புகார்கள் அதிகரிக்க துவங்கிய நிலையில் உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.


அந்த வகையில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.


தொழில்நுட்ப உலகில் 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது வலைத்தள முடக்கம் இதுவாகும். முன்னதாக இன்று அதிகாலை கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை.