பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் 2022: தற்போது போக்கோ கிரிக்கெட் கார்னிவல் விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இந்த சேல் நடைபெறும். அதாவது, இந்த சேல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சேலில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்களும் 5ஜி ஃபோனை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த சேல் உங்களுக்குப் பயன்படும். போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்த சேலில் மிக மலிவாக வாங்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் சேல்: போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


போக்கோ எம்3 ப்ரோ 5ஜி 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.15,999 ஆகும். எனினும், இந்த சேலில் இந்த போன் ரூ.14,549-க்கு கிடைக்கிறது. அதாவது போனில் ரூ.1,450 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத் தவிர இந்த போனில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை மேலும் கணிசமாகக் குறையும்.


மேலும் படிக்க | ரூ.20,000-க்கு இவ்ளோ சிறப்பம்சங்களா? அசத்தும் Poco X4 Pro 5G! 


பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் சேல்: போக்கோ எம்3 ப்ரோ 5ஜி வங்கி சலுகை


போக்கோ எம்3 ப்ரோ 5ஜி 4ஜிபி வாங்க, ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.728 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.13,821 ஆக குறையும். இதற்குப் பிறகு இந்த சேலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் உள்ளது. சேலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை பற்றி காணலாம். 


பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் சேல்: போக்கோ எம்3 ப்ரோ 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை


போக்கோ எம்3 ப்ரோ 5ஜி-இல் ரூ.13,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதையும் லேட்டஸ்ட் மாடல் போனாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் 13 ஆயிரம் தள்ளுபடியை பெற முடியும். அனைத்து தள்ளுபடிகளையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் இந்த போனை வெறும் ரூ.821-க்கு வாங்கலாம். 


மேலும் படிக்க | ரூ. 8,000-க்கும் குறைவாக கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR