Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள பண்டிகை கால சலுகை விற்பனை 2024, செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மெகா சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டிவி உள்ளிட்ட பிற எலக்ட்ரானிகஸ் சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான சலுகை விற்பனை, 24 மணிநேரத்திற்கு முன்னதாக, அதாவது செப்டம்பர் 29, 2024 முதலேயே தொடங்கி விடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் சலுகை விற்பனை விபரம்


சலுகை விற்பனையின் போது, ​ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இது தவிர, கூகுள் பிக்சல் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 23 மாடல் போன்கள் மீது பெரிய அளவில் தள்ளுபடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.


ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடி விபரம்


பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 என்ற சலுகை விற்பனையில் மொபைல் செயலியில் பல ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடிகள் (Discount On Smartphones) பற்றிய தகவல்களை வழங்குகிறது. வழக்கமாக ரூ.89,999 விலையில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி S23 (Samsung Galaxy S23), ரூ.40,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும். வழக்கமாக ரூ.75,999க்கு விற்கப்படும் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) மாடல் போனை ரூ.40,000க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.  இருப்பினும், இறுதி விலை பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.


கூடுதலாக, சாம்சங் கேலக்ஸி S23 FE போனின் அடிப்படை மாடல்,  ரூ.79,999 என்ற விலையில் விற்கப்படும் நிலையில், இது ரூ.30,000க்கும் குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், Poco X6 Pro 5G விலையும் 20,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர  CMF Phone 1, Poco M6 Plus, Vivo T3X, Nothing Phone 2a,  Infinix Note 40 Pro உள்ளிட்ட பல போன்களுக்கு நல்ல தள்ளுபடியை வழங்குவதாக பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி


வங்கி சலுகைகள் விபரம்


பிளிப்கார்ட் வழங்கும்  தள்ளுபடிகள் தவிர, வாங்குபவர்கள் வங்கி சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், Flipkart UPI மூலம் பணம் செலுத்துபவர்கள் ரூ.50 வரை தள்ளுபடி பெறலாம்.


எக்ஸ்சேன்ஞ் சலுகைகள் விபரம்


பழைய பொருட்களுக்கு ஈடாக புதிய பொருட்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் நல்ல நிலைமையில் இருந்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.


மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ