Flipkart Big Saving Days Sale 2023: ஸ்மார்ட்போன்களுக்கு இவ்வளவு கம்மி விலையா?
Flipkart Big Saving Days Sale 2023: ப்ளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஐபோன் 13, சாம்சங் எஃப் 15 5ஜி, ரியல்மி சி55, பிக்சல் 6 ஏ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
Flipkart Big Saving Days Sale 2023: மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நிறுவனம் தனது அடுத்த பிக் ஷேவிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. ப்ளிப்கார்ட்டின் இந்த பிக்பாஸ் ஷேவிங் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல விலை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதன் மூலம் குறைந்த விலையில் சிறப்பான ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன் பெறலாம். ப்ளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனை மே 5 ஆம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்கு நீடிக்கும், இந்த விற்பனை மே 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ப்ளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஐபோன் 13, சாம்சங் எஃப் 15 5ஜி, ரியல்மி சி55, பிக்சல் 6 ஏ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ஸ்மார்ட்போன் பேட்டரியை 100% சார்ஜ் செய்யக்கூடாது!
ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனையில், பிக்சல் 6 ஏ மொபைலானது ரூ.25,999 விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் ரியல்மி ஜிடி நியோ 3டி மொபைலானது ப்ளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் ரூ.19,999-க்கு கிடைக்கும். இது தவிர ப்ளிப்கார்ட்டின் இந்த விற்பனை காலத்தில் போக்கோ X5 ப்ரோ மொபைலானது தள்ளுபடி விலையில் ரூ.20,999க்கு கிடைக்கும். அடுத்ததாக வாடிக்கையாளர்கள் ரியல்மி 10 ப்ரோ + 5G மொபைலை தள்ளுபடி விலையில் ரூ.22,999க்கு வாங்கி கொள்ள முடியும். இந்த மொபைல்களை தொடர்ந்து ப்ளிப்கார்ட்டின் சலுகை கால விற்பனையின் போது, ரியல்மி சி 55 மொபைலானது தள்ளுபடி விலையில் ரூ.7,999க்கு வாங்கி கொள்ளலாம். ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 13 பெரிய தள்ளுபடியில் வழங்கப்படும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது, இருப்பினும் இந்த ஐபோனின் சரியான விலை எவ்வளவு என்று இன்னும் குறிப்பிடப்படவில்லை. போக்கோ சி55 மொபைலை வாங்கும்போது கோடக் மஹிந்திரா வங்கியின் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தற்போது 5ஜி ஐபோன் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.61,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது, மறுபுறம், விற்பனையின் போது மோட்டோ இ 13 மொபைலானது தள்ளுபடி விலையில் ரூ. 7,499க்கு வாங்கி கொள்ள முடியும். கூடுதலாக ப்ளிப்கார்ட் நிறுவனம் மே 1 முதல் "கர்ட்டன் ரைசர் ஒப்பந்தங்களை" சேர்ப்பதாக அறிவித்துள்ளது. முந்தைய விற்பனை நிகழ்வுகளில் செய்தது போல், ப்ளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 13 மொபைலின் தள்ளுபடி விலையை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் சேல் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சலுகை கால விற்பனை தொடங்குவதற்கு முன்னதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் இதுகுறித்த பல பயனுள்ள தகவல்களை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விற்கப்படும் மொபைல்களுக்கு வங்கி தள்ளுபடிகள், பரிமாற்றச் சலுகைகள் மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ மாற்றுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும் ப்ளிப்கார்ட்டின் இந்த பிக் சேவிங்ஸ் டேஸ் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, ப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இனி SPAM அழைப்புகள் வராது! அப்படி வந்தால் உடனே இத பண்ணுங்க! TRAI அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ