Flipkart Realme Festive Days: ஈ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதும் அப்படிப்பட்ட ஒரு அசத்தலான சலுகை துவங்கியுள்ளது. இன்று அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி முதல், பிளிப்கார்ட்டில் (Flipkart) ‘Realme Festive Days' நடைபெறவுள்ளது. இதில் கிடைக்கும் Realme ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த விற்பனையின் ஒரு சிறப்பு வாய்ந்த டீலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த சேலில் ரியல்மியின் அசத்தலான 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.449 க்கு வாங்கலாம். இந்த போனின் அசல் விலை ரூ.29,999 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.


ரூ. 30,000 5ஜி ஸ்மார்ட்ஃபோனை ரூ. 449க்கு வாங்குவது எப்படி?


இந்த டீலில் நாம் Realme X7 Max ஸ்மார்ட்போன் பற்றி பேசுகிறோம். இது ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். சந்தையில் ரூ.29,999 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் 10% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.26,999க்கு கிடைக்கிறது. 


இந்த போனுக்கான கட்டணத்தை ஏதேனும் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தி வாங்கினால், ப்ரீபெய்டு சலுகையின் கீழ் ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1,100 கேஷ்பேக் வழங்கப்படும். இதன் மூலம் இந்த போனை ரூ.20,899-க்கு வாங்கலாம்.


ALSO READ | Realme GT 2 Pro: லீக் ஆனது முக்கிய தகவல்கள், காத்திருக்கும் பயனர்கள்


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போனின் விலையை இன்னும் குறைக்கும்


Flipkart இன் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.20,450 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,899ல் இருந்து வெறும் ரூ.449 ஆகக் குறையும்.


Realme X7 Max: அம்சங்கள்


ரியல்மியின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் (Smartphone) 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. MediaTek Dimension 1200 செயலியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், 6.43-inch Full HD + Super AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதில் பிரதான சென்சார் 64MP, வைட் ஆங்கிள் லென்ஸ் 8MP மற்றும் மேக்ரோ லென்ஸ் 2MP ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும், இந்த போனில் 16MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியுடன் வருகிறது.


Flipkart இல் நடைபெறும் இந்த Realme Festive Days விற்பனையில், அனைத்து விலை வரம்பிலும் உள்ள Realme ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த அசத்தலான சலுகை டிம்பர் 13 வரை இருக்கும். 


ALSO READ | Flipkart பம்பர் சலுகை: ரூ. 17,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 99-க்கு வாங்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR