டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போனை இலவசமாக வாங்க அரிய வாய்ப்பு, முந்துங்கள்
Free Tablet and Smartphone: இளைஞர்களுக்கு கல்வியில் உதவவும், அவர்களுக்கு வளங்களை வழங்கவும் அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் பயனைப் பெறுவார்கள்.
உத்தரபிரதேச அரசு தனது மாநில இளைஞர்களை கல்வித் துறையில் ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இதில் மாணவர்கள் நேரடியாக பலன்களைப் பெறுவார்கள். உண்மையில் இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயன்பெற ஆசைப்படும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி நீங்களும் இளைஞராக இருந்து, இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இன்று நாங்கள் அதைப் பற்றி விரிவாக உங்களுக்கு தெரிவிக்கப் போகிறோம்.
யாருக்கு டேப்லெட் மற்றும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்
* இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் எந்தவொரு மாணவரும் உத்தரப் பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி?
* இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் எந்தவொரு மாணவரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
* இது மட்டுமின்றி, விண்ணப்பிக்கும் இளைஞர்கள் முதுகலை, பட்டப்படிப்பு, துணை மருத்துவம் அல்லது திறன் மேம்பாடு படித்தவராக இருக்க வேண்டும்.
* இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்றுருக்க வேண்டும்.
* இத்துடன் மாணவர்களின் குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
* இதனுடன், மாணவர்கள் சில முக்கிய ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும், இதன் காரணமாக அவர் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முக்கியமான ஆவணங்களைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.
இவை முக்கியமான ஆவணங்கள்
ஆதார் அட்டை
வசிப்பிட சான்று
முந்தைய வகுப்பு தேர்ச்சி சான்று
பள்ளி அடையாள அட்டை
மொபைல் எண்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மாணவரிடம் இந்த தேவையான ஆவணங்கள் இருந்தால், அவர் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர் மற்றும் up.gov.in இல் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் உத்தரபிரதேச அரசால் ஆகஸ்ட் 19, 2021 அன்று தொடங்கப்பட்டது, இதன் மூலம் மாணவர்கள் உதவி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு செக் வைத்த அரசு! இனி இஷ்டத்துக்கு போட முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ