Flipkart Sale: ஜனவரி 27 முதல் பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஏசிகள், ஹீட்டர்கள் மற்றும் கீசர்கள் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் பெரும் தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிளின் (Apple) சமீபத்திய ஸ்மார்ட்போனான iPhone 13 ஐ வெறும் 2,560 ரூபாய்க்கு வாங்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதை எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் காணலாம். 


வெறும் ரூ. 2,560-வில் ஐபோன் 13ஐ வாங்கலாம் 


ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாடு சந்தையில் ரூ.79,900 க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் (Flipkart Electronics Sale), இந்த ஐபோன் 6% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.74,900-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வெறும் ரூ.2,560க்கு இந்த ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என இங்கே காணலாம். 


பிளிப்கார்ட் (Flipkart), ஐபோன் 13 இன் இந்த மாறுபாட்டை மாதத்திற்கு 2,560 ரூபாய் என்ற EMI இல் வழங்குகிறது. இந்த இ.எம்.ஐ சலுகை ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கானது. அடுத்த 36 மாதங்களில் இந்த தொகையை செலுத்த வேண்டும். மற்ற வங்கிகளும் EMI வசதியை வழங்குகின்றன.


ALSO READ | Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு 


EMI இல்லாமலும் மலிவாக வாங்கலாம்


நீங்கள் EMI இல்லாமல் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பினாலும், இதை மலிவாக வாங்க முடியும். ஐபோன் 13 ரூ.79,900க்கு பதிலாக ரூ.74,900க்கு விற்கப்படுகிறது. மேலும், சிட்டி பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடி தள்ளுபடியாக 10% அதாவது ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அப்போது இதன் விலை ரூ.73,900 ஆக குறையும்.


இந்த டீலில் உள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையை வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பயன்படுத்த முடிந்தால், அவர்களுக்கு ரூ.18,850 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரூ.74,900 விலைகொண்ட இந்த ஐபோனை ரூ.55,050க்கு வாங்கலாம்.


ஐபோன் 13 இன் அம்சங்கள்


இந்த டீலில், A15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் iPhone 13 இன் 128GB ஸ்டோரேஜ் மாறுபாடு கிடைக்கிறது. 5G சேவைகளுடன் கூடிய இந்த iPhone 13 ஆனது 6.1-inch Super Retina XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12MP மற்றும் முன் கேமராவும் 12MP-ஐ கொண்டுள்ளன. இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.


Flipkart இன் இந்த விற்பனை ஜனவரி 31 வரை தொடரும்.


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR