பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் தற்போது கூகிளுக்கு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது கூகிள் அசிஸ்டென்ட் மூலம் நேரடியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


கூகிள் அசிஸ்டென்ட் குறித்து நாம் அறிந்ததே., மூன்றாம் தரப்பு அரட்டை செயலிகள் மூலம் செய்திகளை அனுப்ப கூகிள் அசிஸ்டென்ட் உதவும். ஆனால், மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ள இது நாள் வரை அனுமதித்ததில்லை. இந்நிலையில் தற்போது இந்த கூற்றை மாற்றியுள்ளது கூகிள் அசிஸ்டென்ட்.


பயனர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்வதில் கூகிள் எப்போது ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, கூகிள் அசிஸ்டென்ட் உதவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியினை பயனர்களுக்கு கொண்டுவந்துள்ளது. 


இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் 'Hey Google' உடன் 'Whatsapp Video (தொடர்பு பெயருடன்)' என்று கூற வேண்டும்.


முன்னதாக இந்த அம்சத்தை நாம் நமது மொபைலில் கூகிள் அசிஸ்டென்ட் கொண்டு பயன்படுத்த விரும்பினால்.,  கூகிள் அசிஸ்டென்ட் இயல்புநிலை வீடியோ அழைப்பிற்கு (கூகிள் டியோ) மற்றும் மொபைல் தரவைப் பயன்படுத்தும். கூடுதலாக, கூகிள் உதவியாளருக்கு ஆடியோ அழைப்பின் கட்டளை வழங்கப்பட்டால், அது கைபேசியின் அழைப்பு சேவையின் உதவியைப் நாடும். இந்நிலையில் தற்போது பயனர்கள் வீடியோ அழைப்பிற்கான மற்றொரு பயன்பாட்டின் விருப்பத்தைப் பெற்றுள்ளனர்.


இது குறித்து கூகிள் அசிஸ்டென்ட் தயாரிப்பு மேலாளர் கிறிஸ் கூறுகையில், 'கூகிள் அசிஸ்டென்ட் ஏற்கனவே பிரபலமான செய்தியிடல் சேவையுடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக வாட்ஸ்அப் வீடியோ மற்றும் ஆடியோ கால்களையும் கூகிள் அசிஸ்டென்ட் மேற்கொள்ளும் அம்சம் பெறுகிறது. இதற்காக, பயனர்கள் 'Hey Google' உடன் 'Whatsapp Video (தொடர்பு பெயருடன்)' என்று மட்டுமே கூற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


கிறிஸின் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கைக்குப் பிறகு, இந்த அம்சம் Android ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. தற்போது, ​​ஐபோன்களுக்கான அம்சம் வழங்கப்படவில்லை. கூகிள் இந்த அம்சத்தை ஐபோன்களுக்குக் கிடைக்குமா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை. 


கூகிளின் இந்த புதிய அம்சத்தைப் பற்றியும், கூகிள் அசிஸ்டென்டின் புதிய சாதனங்களைப் பற்றியும் கிறிஸ் விரைவில் தகல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.