கதக் நடனக் கலைஞர் சித்தாரா தேவிக்கு கூகுளின் டூடுல்!
இந்தியாவின் தலைசிறந்த ‘கதக்’ நடனக் கலைஞர் சித்தார தேவி. இன்று அவரது 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1920-ம் ஆண்டு பிறந்தார் சித்தாரா தேவி. அவரது 11-வது வயதில் அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் தனலட்சுமி. சித்தாரா தேவி பள்ளிப் பருவத்திலேயே கதக் நடனத்தில் புலமை பெற்று திகழ்ந்தார்.
நோபல் பரிசுபெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை தனது நடன திறமையால் கவர்ந்தார். சித்தாரா தேவியின் நடனத்தை கண்டு வியந்துபோன ரவீந்திரநாத் தாகூர், அவருக்கு ஒரு சால்வையும், ரூ50 ரொக்கப்பரிசும் பரிசாக அளித்தார்.
கதக் நடனக் கலையின் பேரரசி என்று வர்ணிக்கப்பட்ட சித்தாரா தேவி தனது 94வது வயதில், கடந்த 2014-ம் ஆண்டு மும்பையில் காலமானார்.
2011-ம் ஆண்டு அவருக்கு இந்திய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கவுரவம் மிக்க சங்கீத நாடக அகாடமி, பத்மிஸ்ரீ, காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.