மை ஸ்டோரி என்ற பெயரில் கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி எழுதிய சுயசரிதை பல்வேறு சர்ச்சைகள் பெற்றது. ஆங்கிலம், மலையாளம் என இரண்டு இலக்கிய உலகிலும் மிக சிறந்தவர் இவர். இந்நிலையில் இவரது சுயசரிதை வெளிவந்த நாளை கூகுள் டூடுல் இன்று கொண்டாடுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 1, 1934-ம் ஆண்டு கேரளாவில் நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த இவருடைய தந்தை வி.எம். நாயர் ‘மாத்ருபூமி’ நாளிதழின் இயக்குநர் மற்றும் தாயார் பாலாமணியம்மா ஒரு கவிஞர் ஆவர். இவருடைய 15 வயதிலே மோகன் தாஸ் எனும் வயது முதிர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்றது.


மலையாள இலக்கிய கலை உலகில் மாதவிக்குட்டி என்ற பெயரிலும், ஆங்கில உலகில் கமலா தாஸ் என்ற பெயரில் அறியப்படுவார்.


மலையாள நாடு என்ற வார இதழில் தன்னுடைய சுயசரிதையை ‘என்டெ கத’ என்ற பெயரில் தொடராக இவர் எழுதத் தொடங்கினார். பிறகு அது 1976-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. ‘மை ஸ்டோரி’ (My Story) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ‘தி கரண்ட்’ வார இதழில் தொடராக எழுதியது 1977-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.


இவருடைய சுயசரிதை மிக கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. இவருடைய சுயசரிதை சமூக கட்டுப்பாடுகளை மிக கடுமையான வார்த்தைகளால், பெண்கள் மீது புகுத்தப்படுகின்ற கலாச்சாரம், மரபு, ஒழுக்க நெறி போன்றவற்றை பற்றி குறிப்பிட்டிருந்தார். இவருடைய என் கதை சுயசரிதையை மலையாளத்திலிருந்து தமிழில் நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மே 1, 2009-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புனே நகரில் மரணத்தை தழுவினார்.