புதுடெல்லி: கூகுளின் (Google) ஆன்லைன் பேமண்ட் செயலியான கூகிள் பே (Google Pay) ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது.  சில சிக்கல்களை சரிசெய்ய Google Pay (Apple Store)இல் இருந்து அகற்றப்பட்டது என்று கூகுள் கூறுகிறது. Android போன்களில் சிக்கல் இல்லை என்றும், Google Pay செயலி Google Play Store இல் கிடைக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த செயலியில் உள்ள சில சிக்கல்கள் காரணமாக, பயனர்களுக்கு அதிக இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நிறுவனங்கள் அதை Storeஇல் இருந்துஅகற்றுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரிவர்த்தனை சிக்கல்கள்


தற்போது Google Pay செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple Store)இல் கிடைக்கவில்லை, தெரியவில்லை. இதற்கு முன்னரே முன்பே மொபைல்களில் பதிவிறக்கப்பட்ட கூகிள் பே பயன்பாடு ஐபோனில் இயங்குகிறது. ஆனால், பரிவர்த்தனைகளை செய்வதில் சிக்கல் இருப்பதாக பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.


எவ்வளவு நாட்களில் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) இந்த பிரச்சனையை சரி செய்யும்?  


கூகுள் பே செயலியில் பரிவர்த்தனை தோல்விகளால் ஏற்படும் சிக்கல் காரணமாக சில iOS பயனர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்துள்ளது. இதை சரிசெய்ய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. சிக்கல்கள் நீக்கப்பட்டவுடன், Google Pay ஆப்பிள் பிளே ஸ்டோரில் உள்ள பயனர்களுக்கு மீண்டும் கிடைக்கும். இதற்கு முன்பு இதே போன்ற சில பயன்பாடுகள் ஆப் ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


அதுமட்டுமல்ல, இதுபோன்ற சில முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, பயனர்களின் நன்மைக்காகத் தான். அவர்களுக்கு சிக்கல்கள் ஏதேனும் ஏற்படலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டால், நிறுவனங்கள் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும். 


Also Read | குழந்தைகளுக்கான 3 Android பயன்பாடுகள் Google Play Store இலிருந்து நீக்கம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR