குரோமில் 30 விதமான பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து கூகுள் குரோம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதில் ஏழு விதமான குறைப்பாடுகள் கடுமையான பாதிப்புகளை விளைவிக்கக்கூடியதாக உள்ளது.  மேலும் ஹேக்கர்களால் பிரவுசர் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவிடும் என்று பில்லியன் கணக்கான குரோம் பயனாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.  தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விரைவில் இந்த பிரவுசரில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தபின் ஒரு புதிய அப்டேட் வழங்கப்படும் என்று கூறியுள்ளது, இந்த புதிய அப்டேட்டை நிறுவனம் இன்னும் சில தினங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கூகுள் குரோமிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய 6 சிறந்த பிரவுசர்கள்!


இந்த குறைப்பாட்டின் மூலம் விண்டோஸ், MAC மற்றும் லினக்ஸ் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ஹேக் செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை.  மேலும் இதில் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் இந்நிறுவனம் தெளிவாக கூறவில்லை.  அறிக்கையின் அடிப்படையில் குறைபாடுகளை சரிசெய்து அடுத்த சில நாட்களில் புதிய அப்டேட்டை நிறுவனம் வெளியிடும், அப்டேட் செய்யப்படும் வரை மற்ற ஹேக்கிங்கில் இருந்து நிறுவனம் பாதுகாப்பளிக்கிறது.  பாதுகாப்பு குறைபாடுகளின் மூலம் வளர்ச்சி தடைபடுவதை தடுத்து எங்களுடன் பணியாற்றிய அனைத்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.



இதற்கிடையில், கூகுள் தனிப்பட்ட கன்டென்ட்டுகளின் பட்டியலை விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது, இது தேடல் முடிவுகளிலிருந்து ஃபிஸிக்கல் முகவரி, தொலைபேசி எண், பாஸ்வோர்ட்ஸ், கிரெடிட் கார்டு எண்கள், வங்கி கணக்கு ஐடிகள் அல்லது உங்கள் கையெழுத்து போடப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றை கவர் செய்யும்.  மேலும் கூகுள், ஒப்புதல் இல்லாத வெளிப்படையான அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட படங்கள், ஆபாச போலிகள் அல்லது தவறான லின்குகளை அகற்றவும் திட்டமிட்டுள்ளது.  தி வெர்ஜ் வெளியிட்ட அறிக்கைபடி, இணையத்தின் பயன்பாடு தேவை அதிகரித்து வருவதால் கூகுள் பயனர்களுக்கு புதிய ஆப்ஷன்களை வழங்கியுள்ளது, ஆனால் தேடலில் மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரிகள் இடம்பெறுவது ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | கூகுளில் இதை தேடினால் ஜெயிலுக்கு போக நேரிடும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR