இணையத்தின் தேடல் ஜாம்பவானான கூகிள் இன்று தனது சிறப்பு ஊடாடும் டூடில் மூலம் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சனின் 308-வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாமுவேல் ஜான்சன், செப்டம்பர் 18, 1709-ஆம் ஆண்டு புத்தக வியாபாரியின் மகனாக இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். இன்று உலகமே பயன்படுத்தும் அகாரதியினை வடிவமைத்த பெருமைக்குறியவர் இவர் தான். எனவே இவர் ‘அகராதியின் தந்தை’ என அழைக்கப்படுகின்றார்.



கதை, கவிதை, கட்டுரை ஆசிரியர், இலக்கிய விமர்சகர், ஆசிரியர் என பன்முக திறமையாளரான இவர் 1784 ஆம் ஆண்டு உலகை விட்டு விடைப்பெற்றார். எனினும் அவரது படைப்பு அவரை நினைவுப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.