மத்திய அரசு இணையதளத்தில் மலிவான விலையில் லேப்டாப்! பிளிப்கார்ட், அமேசான் வேண்டாம்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளங்களை விட தரமான பொருட்களை மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் வாங்கலாம்.
இந்தியாவில் ஷாப்பிங் செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வலுவான வலைத்தளங்கள் உள்ளன. ஆனால் மலிவான தயாரிப்பு என்று வரும்போது, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களையே வாடிக்கையாளர்கள் அதிகம் நம்புகின்றனர். உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று இருக்கிறது. இந்த தளத்தில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதாவது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களைக் காட்டிலும் தரமான பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும்.
அந்த தளத்தின் பெயர் ஜெம் (GeM). ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசுக்கு சொந்தமான இந்த தளத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தைப் போலவே மிக குறைவான விலையில் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். உண்மையில், உங்களுக்கு நம்பக்கூட கொஞ்சம் கடினமாக இருக்கும். எப்படி இந்த தளத்தில் இவ்வளவு விலை குறைவாக பொருட்களின் விலை இருக்கிறது என யோசிக்கலாம்.
ஆனால் வாடிக்கையாளர்கள் பொருட்களின் தரத்தைப் பற்றி கவலைகொள்ள தேவையில்லை. அதேநேரத்தில் சிறந்த தள்ளுபடிகளையும் இந்த தளத்தின் ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இப்போது மடிக்கணிணிக்கு அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Acer's Ryzen 3 14-இன்ச் லேப்டாப் அசல் விலை ரூ.49990. ஆனால் இந்த இணையதளத்தில் 51% தள்ளுபடி உள்ளது. வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.24407-க்கு வாங்கலாம்.
இது தவிர, Acer-ன் Intel Core i7 14-இன்ச் மடிக்கணினி அசல் விலை ரூ.1,05,000. ஆனால் 82 சதவீத பெரும் தள்ளுபடியுடன், ரூ.18,900-க்கு வாங்கலாம். இதனைவிட அதிக தள்ளுபடி இருக்கும் லேப்டாப்கள் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், HP-ன் Intel Core i7 14-இன்ச் லேப்டாப் உள்ளது. இது இந்த இணையதளத்தில் ரூ.12,671-க்கு விற்கப்படுகிறது. ஆனால் இதன் உண்மையான விலை ரூ.14,0635 ஆகும்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ