நாய், பூனைகள் பேசுவதை புரிந்துகொள்ளலாம்... மிரட்டும் AI - முழு விவரம்!
AI Technology: நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் உங்களிடம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அறிந்துகொள்ள ஒரு AI தொழில்நுட்பம் உதவிசெய்யும். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
AI Technology: தொழில்நுட்பம் என்பது எப்போதுமே இருமுனை கத்திதான். தற்போதைய இந்த நவீன உலகில் தொழில்நுட்பம் இன்றி ஒரு வினாடி கூட ஒருவர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்ட பின்னர், அதே தொழில்நுட்பம்தான் பல தீங்குகளுக்கும் உதவிகரமாக இருக்கிறது. திருட்டு, மோசடி என பல குற்றச்செயல்களுக்கும் தொழில்நுட்பம்தான் ஒரு கருவியாக உள்ளது.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) என்பது பல துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் தொழில்நுட்பம் உள்ளிட்டவை பல குற்றச்செயல்கள் நடக்கின்றன. சமீபத்தில், இன்ஸ்டாகிராம், X உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மற்றொரு பெண்ணின் வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இருப்பது போன்ற போலி வீடியோ வைரலானது.
அச்சுறுத்தும் AI
அந்த வீடியோ டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது தெரியவந்தது. ராஷ்மிகா மந்தனாவும் இந்த வீடியோ தன்னை கவலைச் செய்யவைப்பதாக நேற்று கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பிரபலத்திற்கே அச்சுறுத்தலை தரும் அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்றால் சாமனிய மனிதனுக்கு இதன் மூலம் என்னென்ன அபாயங்கள் ஏற்படும் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. ஆனால், முன்னே சொன்னதுபோல் இது கெட்ட செயல்களுக்கு மட்டுமின்றி பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது.
மேலும் படிக்க | ராஷ்மிகாவின் வீடியோ வைரல்... அமிதாப் பச்சன் பகிர்ந்த பதிவு - உண்மை என்ன?
அந்த வகையில், நீங்கள் செல்லப்பிராணிகளை விரும்புபவராகவும், வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்பவருமாக இருந்தால் இந்த AI தொழில்நுட்பம் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகர செய்தியை கொண்டுவந்துள்ளது.
செல்லப்பிராணிகளின் புரிந்துகொள்ளலாம்
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு தங்களின் நாயோ பூனையோ தங்களிடம் என்ன பேச விரும்பும், தான் சொல்வதற்கு என்ன பதிலளிக்கும் என்று அறிந்துகொள்ள எப்போதுமே விருப்பம் இருக்கும். ஆனால், அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது அல்லவா. தற்போது ஒரு AI தொழில்நுட்பம் உங்கள் செல்லப்பிராணிகள் சொல்ல விரும்புவதை உங்களுக்கு தெரியப்படுத்தும்.
உங்கள் செல்லப்பிராணியின் அனைத்து உணர்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் புரிந்து கொள்ள முடிந்தால், சில நேரங்களில் அது உங்களை பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்றலாம். இருப்பினும், செல்லப்பிராணிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவற்றின் உடல் மொழி எதிரில் இருப்பவருக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
வித்தியாசமான உணர்வுகள்
உதாரணமாக, ஒரு நாய் உங்களுக்கு முன்னால் வித்தியாசமான உணர்வை வெளிப்படுத்தும். அதே நாய் மற்றொரு நாயைச் சந்திக்கும் போது, அது வித்தியாசமான உணர்வை வெளிப்படுத்தும் அல்லவா. இதேபோல், பூனைகளும் வெவ்வேறு தருணங்களில் வெவ்றேு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, லிங்கன் பல்கலைக்கழகத்தின் கால்நடை நடத்தை பேராசிரியரான டேனியல் மில்ஸ், AI தொழில்நுட்பம் உதவியுடன் விலங்குகளுக்கும் நமக்கும் இடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார். சமீப காலமாக பல்வேறு துறைகளில் AI தனது பங்களிப்பை அளித்து வருவது போல், செல்லப்பிராணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்றும், நமது செல்ல பிராணிகளை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
276 முகபாவனைகள்
பூனைகளின் முகபாவனைகளின் சிக்கலான தன்மை குறித்து ஒரு அறிவியல் இதழில் பகிரப்பட்ட பிற ஆராய்ச்சிகளைப் பின்பற்றி, டேனியல் மில்ஸின் ஆய்வு உள்ளது. மற்ற பூனைகளுடன் பழகும் போது பூனைகள் 276 முகபாவனைகளை வெளிப்படுத்துகின்றன என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த எல்லா முகபாவனையையும் புரிந்துகொள்வது நம் அனைவருக்கும் கடினம். மற்ற பூனைகளுடன் பழகுவதை விட மனிதர்களை நோக்கி பூனைகளின் வெளிப்படுத்தும் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்று லியோன் கல்லூரியின் உதவி உளவியல் பேராசிரியரான டாக்டர் பிரிட்டானி ஃப்ளோர்கிவிச் கூறினார். அதாவது பூனைகளின் உடல் மொழி மனிதர்களுடன் வேறு வேறு விதமாக தொடர்பு கொள்ளும் என்றார்.
வீடியோ மூலம் பயிற்சி
பல முகபாவனைகள் இருப்பதால், அவற்றைப் புரிந்துகொள்ள AI நமக்கு உதவும் என்று டாக்டர் பிரிட்டானி கூறினார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், அதன் காதுகளின் நிலை போன்ற குறிப்பிட்ட குணாதிசயங்களைப் பார்த்து, செல்லப்பிராணிகள் என்ன கூறுகின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று மில்ஸ் கூறுகிறார்.
தற்போது, மில்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஆன்லைனில் கிடைக்கும் செல்லப்பிராணிகளின் வீடியோக்களில் இருந்து AI அமைப்பை உருவாக்கி வருகின்றனர், இது நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளின் உரையாடல்களைப் புரிந்துகொள்ள நம் அனைவருக்கும் உதவும் என கூறப்படுகிறது. இதையெல்லாம் சாமானியர்கள் பயன்படுத்தாவிட்டாலும், விலங்குகள் நலத் துறையில் செயற்கை நுண்ணறிவால் நமக்கு உதவ முடியும் என்றார். மில்ஸ் குழு அதன் AI அமைப்பை வீடியோக்களுடன் பயிற்றுவிக்கிறது.
மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் AI உடன் வேடிக்கையான ஸ்டிக்கர்களை உருவாக்குங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ