ஆதார் சேலஞ்சில் ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் டெபாசிட் செய்த ஹேக்கர்ஸ்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள் முதல் மையல் கியாஸ் மானியம் வரையிலான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது ஆதார். 


இந்நிலையில், அதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் அதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இதையடுத்து, இந்நிலையில் "ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் அந்த எண் தொடர்பான தகவல்களை திருடுங்கள் பார்ப்போம்" என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் ஒன்றை விடுத்தார். ட்விட்டரில் 12 இலக்க ஆதார் எண்ணையும் அவர் வெளியிட்டார்.


ஆர்.எஸ்.சர்மா ஆதார் எண்ணை பதிவிட்ட சில மணிநேரத்திலேயே ஹேக்கர்ஸ் அவரது மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை வரிசையாக வெளியிட்டனர். இந்நிலையில், R.S.ஷர்மா இது பொய்யான தகவல்கள் என கூற. ஹேக்கர்ஸ் அவரது டிமேட் கணக்கின் எண், அதில் அவரது மூன்று வருட பேமெண்ட் செய்ததற்கான கணக்கு வழக்குகளை எடுத்து காட்டினார்கள், வலதுசாரி இணையதளங்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது, ஆதார் கார்டு பயன்படுத்தி ஜூலை 2 ஆர்கானிக் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக விற்றது முதல் கொண்டு ஹேக்கர்கள் வெளியிட்டனர்.


அது மட்டுமின்றி, ஹேக்கர்ஸ் ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா-வின் வங்கிக்கணக்கில் BHIM மற்றும் Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி ஒரு ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இதை கண்ட ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா மட்டுமின்றி பொதுமக்களும் விழிபிதுங்கி நிக்கின்றனர்.