Soundmojis: இனி உங்கள் facebook chat-ல் ஒலியுடன் அசத்தும் எமோஜிக்கள், புதிய அம்சம் அறிமுகம்
பேஸ்புக் மெசஞ்சரில் `சவுண்ட்மோஜிஸ்` என்று அழைக்கப்படும் ஒலியுடன் கூடிய எமோஜிகளை வெளியிடுவதாக பேஸ்புக் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
புதுடெல்லி: உலக எமோஜி தினம் நாளை, அதாவது ஜூலை 17 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதற்கு முன்னதாக, பேஸ்புக் மெசஞ்சரில் "சவுண்ட்மோஜிஸ்" என்று அழைக்கப்படும் ஒலியுடன் கூடிய எமோஜிகளை வெளியிடுவதாக பேஸ்புக் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
சவுண்ட்மோஜிகள் அடுத்த நிலை எமோஜிக்களாகும். இது மெசஞ்சர் (Facebook Messenger) சாட்களில், கைதட்டல், டிரம்ரோல் மற்றும் வில்லத்தனமான சிரிப்பு உள்ளிட்ட சிறிய ஒலி கிளிப்புகளை அனுப்ப பயனர்களை அனுமதிக்கிறது.
ஒவ்வொரு நாளும், மக்கள் 2.4 பில்லியனுக்கும் அதிகமான எமோஜி செய்திகளை மெசஞ்சரில் அனுப்புகிறார்கள். எமோஜிக்கள் உலகெங்கிலும் உள்ள மெசஞ்சர் சாட்களுக்கு வண்ணங்களையும், துடிதுடிப்பையும் சேர்க்கின்றன. மேலும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பல விஷயங்களை நாம் எமோஜிக்கள் மூலம் கூற முடிகின்றது.” என்று மெசஞ்சர், மெசேஜிங் தயாரிப்புகளின் வி.பி., லோரெடனா கிரிசன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"உங்கள் எமோஜிகளால் பேச முடிந்தால், அவை என்ன ஒலியை உருவாக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள்? மெசஞ்சரின் சமீபத்திய வெளிப்பாடு கருவியை அறிமுகப்படுத்துகிறோம் - சவுண்ட்மோஜிஸ்," என்று கிரிசன் மேலும் கூறினார்.
ALSO READ: Shocking: 20 லட்சம் பேரின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்; அதிர்ச்சி
சவுண்ட்மோஜிகளைப் பார்க்க, பயனர்கள் மெசஞ்சர் செயலிக்குள் சென்று, சாட்டை துவக்கி, ‘ஸ்மைலி ஃபேஸ்’-ஐ டேப் செய்ய வேண்டும். எக்ஸ்பிரெஷன்ஸ் மெனுவை திறந்து லவுட்ஸ்பீக்கர் ஐகானை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அங்கிருந்து, பயனர்கள் (Facebook Users) தங்களுக்கு பிடித்த சவுண்ட்மோஜிகளை முன்னோட்டமிட்டு அனுப்பலாம்.
"நீங்கள் தேர்வுசெய்ய முழு சவுண்ட்மோஜி லைப்ரரியை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.இதை நாங்கள் அவ்வப்போது புதிய சவுண்ட் எஃபெக்டுகள் மற்றும் பிரபலமான ஒலி பைட்டுகள் கொண்டு புதுப்பிப்போம்.” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
"ஒவ்வொரு ஒலியும் ஒரு எமோஜியால் குறிக்கப்படுகின்றது. பயனர்களுக்கு பிடித்த எமோஜிக்களை நினைவில் வைத்து இந்த அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
வேடிக்கையான மற்றும் புதுமையான அம்சங்களை உருவாக்குவதை தங்கள் நிறுவனம் விரும்புவதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த எமோஜிக்கள் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைத்து இருப்பதை உறுதி செய்வதோடு, அவர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் அளிக்கிறது.
ALSO READ:பேஸ்புக்கில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR