Netflix Gaming, GTA Triology: ஓடிடி பயன்பாடு என்பது இந்த காலகட்டத்தில் பரவலான மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. கொரோனா தொற்று காரணம், ஸ்மார்ட் டிவியின் விற்பனை வளர்ச்சி ஆகியவை ஓடிடி பயன்பாட்டை மக்களிடத்தில் அதிகரிக்க செய்துள்ளது எனலாம். மாதச் சந்தா, ஆண்டுச் சந்தா ஆகியவற்றின் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை காண மட்டுமில்லாமல் பல ஓடிடி தளங்கள் கேமிங்களிலும் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக, நெட்பிளிக்ஸ் தளத்தில் கேமிங்கிற்கு என தனி பகுதியே உள்ளது என்பதை அதன் வாடிக்கையாளர்கள் அறிவார்கள். இந்தியாவில் அதன் பயன்பாடு இன்னும் பெரியளவில் உயரவில்லை என்றாலும் வெளிநாடுகளில் இதன் பயன்பாடு அதிகரித்தே காணப்படுகிறது. 


90s கிட்ஸ்களின் கேம்


அந்த வகையில், நெட்பிளிக்ஸ் அதன் கேம்ஸ் லைப்ரரியை மூன்று புதிய கேம்களுடன் விரிவுபடுத்த உள்ளது. இவை வழக்கமான கேம்கள் இல்லை, மிகவும் பிரபலமான Grand Theft Auto (GTA) ஃபிரான்சைஸ்களின் கேம்ளாகும். GTA Triology: Definitive Edition என Liberty City, Vice City, San Andreas ஆகிய மூன்று கேம்களை உள்ளடக்கி உள்ளது. அடுத்த மாதம் Netflix தளத்தின் கேம்ஸ் லைப்ரரியில் இவை சேர்க்கப்படுகிறது. இதனை அதன் சந்தாதாரர்கள் இலவசமாக விளையாடிக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?


GTA Triology வரும் டிசம்பர் 14 அன்று நெட்பிளிக்ஸில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் ஆகியோர் நெட்பிளிக்ஸ் செயலி மூலம் கேமை விளையாட முடியும். இந்த GTA Triology கேம்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பலமடையும் நெட்பிளிக்ஸ் கேம்


இது நிச்சயமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது இது அந்நிறுவனத்திற்கு புதிதல்ல. முன்னதாக, நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆர்கேட் கேம்களை உட்பட அனைத்து வகையான கேம்களையும் சேர்த்திருந்தது. நெட்ஃபிக்ஸ் கேம்ஸ் லைப்ரரியில் ஏற்கனவே பிரபலமான ஹேடஸ் கேம் உள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் சொந்த விளையாட்டுகளையும் உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதன் சொந்த கேம்களில் ஒன்று Actionfree II: Last Signal, இது நைட் ஸ்கூல் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்டது. 


நெட்பிளிக்ஸ் அதன் கேமிங் பிரிவை வாடிக்கையாளர்களிடம் பரவலாக்கவே இதுபோன்ற மக்களை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனலாம். நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள சில பிரபலமான கேம்கள் என்றால் Spiritfarer, Valiant Hearts: Coming Home, Befor Your Eyes போன்றவற்றை கூறலாம். GTA போன்ற கேம்களை உள்ளடக்கி நெட்ஃபிக்ஸ் அதன் கேம்ஸ் லைப்ரரியை பலப்படுத்துகிறது, ஏனெனில் இது வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை விட அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது.


மேலும் படிக்க | ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! இலவசமாக Netflix, தினசரி 3GB டேட்டா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ