இன்று(புதன்கிழமை) தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு "ஏஜ் ஆப் இன்டெலிஜென்ஸ்" என்ற தலைப்பில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இந்த AI(Artificial Intelligence) மூலம் சுகாதார சேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசு சேவைகள் ஆகியவற்றில் AI பயன்பாட்டை விரிவுபடுத்தலாம். இதன்மூலம் சமூக பொருளாதார வாய்ப்புகள் ஏற்ப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AI தொழில்நுட்பத்தில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் டிஜிட்டல் உலகில் எப்படி நன்மைகளை பெறுவது, அதிகரித்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எப்படி செயல்திறனை மேம்படுத்துவது, சேவைகள் துரிதமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் AI வடிவமைக்கப்பட்டு உள்ளது. வரும் களத்தில் AI முக்கிய பங்கு வகிக்கும்.


இதுக்குறித்து இந்தியாவின் மைக்ரோசாப்ட் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி, "எங்கள் நோக்கம் AI மூலம் ஒரு மனிதனின் தேவைகளை இணைப்பது ஆகும். தற்போது இந்தயாவில் AI செயல்படத் தொடங்கியுள்ளது. உள்ளது. AI நான்கு முக்கிய அடிப்படை தூண்களை கொண்டுள்ளது. 1.புதுமுயற்சிகளுக்கான ஒத்துழைப்பு, 2.சாத்தியமான டிஜிட்டல் மாற்றம் தொழில்கள் செய்ய, 3.எதிர்கால வளர்ச்சி மற்றும் பயன்பாடு, 4.தொழிலாளர்களில் மூலம் சமூகத்தில் தாக்கம் உருவாக்குதல் போன்றவை AI ன் நிலையான அடிப்படை ஆகும். ஏஐ அனைத்து இந்த பகுதியில் ஒரு வளர்ந்த நெறிமுறை கட்டமைப்பை கீழ் இருக்க வேண்டும். AI இந்தியாவின் வளர்ச்சிக்கு செயலாற்றும். குடிமக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க சேவைகளை எளிதாக அணுக முடியும்.


உதாரணமாக, இந்தியாவின் மொழி சார்ந்த பன்முகத்தன்மை மற்றும் கல்வியறிவு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது. டிஜிட்டல் மொழியின் தடை காரணமாக குடிமக்களுக்கு எளிதாக சேவைகள் கிடைக்கவில்லை. இந்த தடையை நீக்கி குரல் அங்கீகாரம், உரை, பேச்சு, எழுத்து போன்ற அனைத்தும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு தருவதில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்துத் தரவுகளும் தங்கள் விரும்பும் மொழியில் வழங்கப்படும். மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் இந்த சேவைகளை வழங்க பணிபுரிந்து வருகிறது என ஆனந்த் மகேஸ்வரி கூறினார்.