அன்றாட தேவைகளுக்குக் கூட மக்கள் இப்போது கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். யுபிஐ ஐடி மூலம் பணம் செலுத்துவது என்பது மிகவும் எளிமையாக இருக்கிறது. இந்த சூழலில் உங்களின் போன் தொலைந்தால், உங்களின் வங்கிக் கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதால் PhonePe, Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே பிளாக் செய்ய வேண்டும்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Paytm கணக்கை பிளாக் செய்யும் வழிமுறை


* முதலில் Paytm Payments Bank உதவி எண்ணை 01204456456 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
* அதில், தொலைந்துபோன தொலைபேசி என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* மாற்று தொலைபேசி எண் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களின் தொலைந்த தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும்.
* அதன் பிறகு, ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். 
* இதனை செய்தவுடன் Paytm இணையதளத்திற்குச் சென்று 24x7 உதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
* அதில் Report a Fraud என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களின் Issues ஆப்சனில் புகாரை பதிவிட வேண்டும்.
* இதற்குப் பிறகு, உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். Paytm உங்கள் கணக்கைச் சரிபார்த்து தற்காலிகமாகத் தடுக்கும்.


மேலும் படிக்க | கூட்டத்தில் காணாமல் போய்விட்டால் கண்டுபிடிப்பதை சுலபமாக்கும் கூகுள் மேப்ஸ்


Google Pay கணக்கை பிளாக் செய்வது டிப்ஸ் 


* வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் 18004190157 என்ற எண்ணில் அழைக்கலாம்.
* அதில் சேவை மைய அதிகாரி உங்களின் தகவல்களை சரிபார்த்து கூகுள் பே அக்கவுண்டை முடக்க உதவி செய்வார்.


PhonePe கணக்குகளை பிளாக் செய்யும் வழிமுறை


* 08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
* உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதில் ஓடிபி பெறவில்லை என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் ஓடிபி அனுப்பப்படும்போது, அப்போதும் ஓடிபி பெறவில்லை என்ற ஆப்சனை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். 


* இதன்பிறகு சிம் மற்றும் மொபைல் தொலைந்துவிட்டது என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்  
* எக்ஸிகியூட்டிவ் உங்களிடம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கடைசியாக பணம் செலுத்திய தகவல் மற்றும் பரிவர்த்தனை மதிப்பு போன்ற விவரங்களைக் கேட்டு உங்கள் PhonePe கணக்கைத் பிளாக் செய்ய உதவுவார். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! போலி லோன் செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ