இப்போது ஒரு வீட்டில் நான்கு ஸ்மார்ட்போன்களுக்கும் குறைவில்லாமல் இருக்கின்றன. தேவையின் அடிப்படையில் எல்லோரும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு உலகம் ஸ்மார்டாக மாறிவிட்டது. குழந்தைகூட ஸ்மார்ட்போன் இல்லாமல் தூங்க மறுக்கும் காலமாக இருக்கும் இந்த நேரத்தில், அவற்றை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறை இருப்பதை பலரும் தெரிந்து கொள்ளாத காரணத்தால் போனை சுத்தம் செய்கிறேன் என்ற அவர்கள் செய்யும் சிறு தவறு ஸ்மார்ட்போனை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடுகிறது அல்லது பழுதாகிவிடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், ஸ்மார்ட்போன் சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கார் வாங்கப்போறீங்களா? இந்த பட்டியல பார்த்துட்டு வாங்குங்க!!


ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் முன் தவிர்க்க வேண்டியவை


ஊசிகளை பயன்படுத்தாதீர்கள்


நீங்கள் ஸ்மார்ட்போனின் ஆடியோ ஜாக் அல்லது சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவற்றில் இருக்கும் தூசுகளை சுத்தம் செய்ய விரும்பினால், நீங்கள் எந்த கூர்மையான பொருளையும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வது மோசமாக சேதமடையக்கூடும். மொபைல் போன்களை பழுது பார்ப்பவர்களுக்கு அதனை எப்படி கையாள வேண்டும் என்ற நுட்பம் தெரியும். ஒருவேளை தவறு நடந்தால்கூட அவர்களால் அதனை சரி செய்து கொடுக்க முடியும். நம்மால் முடியுமா? என்று யோசித்து சில நூறுகள் செலவு செய்ய பயந்து, ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நிலைக்கு செல்லாதீர்கள்.


ஹீட்டரை பயன்படுத்த வேண்டாம்


பல நேரங்களில் மக்கள் தங்கள் வீட்டில் கிடக்கும் ஹீட்டிங் ப்ளோவரைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது ஸ்மார்ட்போனுக்குள் சேதத்தை ஏற்படுத்தும். அதிக ஹீட் காரணமாக என்ன பொருள் சேதமாகிறதோ அதற்கு ஏற்ப நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.


திரவ கிளீனர்கள் கூடாது


சிலர் பொதுவான திரவ கிளீனர்களைப் பயன்படுத்தி தங்கள் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்கிறார்கள். இதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பொதுவான திரவ கிளீனரில் இருக்கும் நீர், உங்கள் ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எப்போதும் ஆல்கஹால் அடிப்படையிலான கிளீனரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் எந்தவிதமான சேத பிரச்சனையும் இல்லை.


சாதாரண துணி வேண்டாம்


உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்கீரினை நீங்கள் சுத்தம் செய்ய முற்பட்டால், அது உங்கள் ஸ்கீரினை சேதப்படுத்தும். எப்போது ஸ்கிரீனை சுத்தப்படுத்த முயற்சித்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்த வேண்டும். இது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை தூய்மையாக வைத்திருப்பது மட்டுமின்றி காட்சியை கிளீனாக காட்டும்.


மேலும் படிக்க | AI மூலம் மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ