வங்கி சார்ந்த சேவைகள், வருமான வரி கணக்கு என பணம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற பான் கார்டு அவசியம். இந்த நிலையில் பான் கார்டு எண்ணையும், ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, கூடுதல் காலக்கெடு நீட்டிப்பு மேலும் வழங்கப்படுமா என கேள்வி எழுந்தத நிலையில் இதற்கான காலக்கெடுவை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்காவிட்டால்,ஜூலை, 1 ஆம் தேதி முதல் பான் செயலற்றதாகிவிடும். இதனிடையே ஆதார்-பான் இணைப்பதில் பல சிக்கல் இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் எழுப்பப்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று, அவர்களின் ஆதார் கார்டு தவறான பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தான். எனவே இதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இணைக்க வேண்டும்?
வருமான வரிச் சட்டம் 139AA இன் படி, நிரந்தர கணக்கு எண் (PAN) ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்கள். அவர்கள் தங்கள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் PAN ஒதுக்கப்பட்ட நபர்களுக்கும் இது பொருந்தும். இதற்கிடையில் ஜூன் 30க்கு முன்பு பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் நீங்கள் ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | அதிகமாக SPAM கால் வருகிறதா? ப்ளாக் செய்வது எப்படி? 


டீ லிங்க் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை
- பான் கார்டின் நகல்
- ஆதார் அட்டையின் நகல்
- புகார் கடிதத்தின் நகல்
- அஞ்சல் முகவரியின் விவரங்களைக் கொடுக்கும் ஆவணம்
- மின்னஞ்சல் முகவரி


பான்-ஆதாரை டீ லிங்க் செய்ய எப்படி


படி 1: PAN சேவை வழங்குநரிடமிருந்து பான் அட்டை செயலாக்க விவரங்களைப் பெறவும்.
படி 2: ஆரம்ப மற்றும் அடுத்தடுத்த ஒதுக்கீட்டாளர்களின் பான் கார்டு அடையாளத்தைக் கோரவும்.
படி 3: தேவையான ஆவணங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவும்.


மேலும் படிக்க | Flipkart Sale: வெறும் 13 ஆயிரத்திற்கு ஐபோன் - அதிரடி விலை குறைப்பில் அசத்தல் விற்பனை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ