ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் பல பொருட்கள்  டூப்ளிகேட் ஆக உள்ளது என்பதால், எச்சரிக்கை அவசியம்.  ஒரிஜினல் ஆப்பிள் சார்ஜிங் அடாப்டரின் விலை சுமார் ரூ.1600 ஆகும். அதே சமயம் அதன் டூப்ளிகேட் பதிப்பு பல ஈ-காமர்ஸ் இணையதளங்களில் சுமார் ரூ.1200க்கு கிடைக்கிறது. மலிவாக கிடைக்கிறது என வாங்குவது, முதலுக்கே மோசமாகி விடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டூப்ளிகேட் பொருட்கள் பெரும்பாலும் ஒரிஜினலைப் போலவே பேக்கேஜிங்,  வடிவமைப்பு மற்றும் பெயரில் வருவதால், தயாரிப்புகளை வேறுபடுத்தி அறிவது மிக கடினம்.  இருப்பினும், பேக்கேஜிங், பெயர் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் உள்ள சிறிய அளவிலான முரண்பாடுகளைப் கூர்ந்து கவனிப்பதன் மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியலாம். ஆனால் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கும் வகையில் எளிதானது அல்ல. 


ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் தயாரிப்புகளுக்கு இடையே நிச்சயம்  வேறுபாடு உள்ளது.  ஸ்மார்ட்போன், சார்ஜர், ஸ்மார்ட் டிவி என எந்த ஒரு  எலக்ட்ரானிக் சாதனம் அல்லது மின்னணு தயாரிப்பு ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை எவ்வாறு அறிய முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஒரு எலக்ட்ரானிக் சாதனம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அதன் 'BIS R-Number ' மூலம் எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம்


BIS R-Number என்றால் என்ன?


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள் இந்தியாவில் சந்தையில்  விற்பனைக்கு வரும் முன் கட்டாயப் பதிவுத் திட்டத்தின்  பதிவு செய்வது கட்டாயமாகும்.  அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியாளர்களும் BIS நிலையான அடையாளத்தைப் பயன்படுத்த BIS பதிவைப் பெற வேண்டும். அதனுடன் R- எண்ணும் இருக்கும். 'BIS R-Number ' என்பது இந்தியத் தரநிலைகளின் பணியகத்தின் (BIS) பதிவு எண். 


போலி பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, சார்ஜர், ஸ்மார்ட் ஸ்பீக்கர், பிரிண்டர், மைக்ரோவேவ் ஓவன், ஸ்மார்ட்போன் போன்ற அனைத்து மின்னணு சாதனங்கள் BIS கட்டாயப் பதிவின் கீழ் வருகின்றன. போலி தயாரிப்புகளிலிருந்து உண்மையான தயாரிப்புகளை அவற்றின் R- எண்ணைப் பயன்படுத்தி எவ்வாறு வேறுபடுத்தி அறிவது என்பதை  அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்


நாம் வாங்கும்  எலக்ட்ரானிக் பொருட்கள் உண்மையானது தானா என்பதை கண்டறியும் வழிமுறை


1. உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியை பதிவிறக்கவும்


2. உங்கள் ப்ரொஃபைலை உருவாக்கி அனைத்து விவரங்களையும் நிரப்பவும்


3. இப்போது, ​​UMANG செயலியின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, 'BIS R number verify' எனத் தேடவும்


4. CRS இன் கீழ், 'Verify R-no' என்பதைக் கிளிக் செய்யவும். 


5. தயாரிப்பின் உற்பத்தியாளர், அதன் விலை போன்ற விவரங்களைக் கொண்ட லேபிளில் வழக்கமாகக் காணப்படும் தயாரிப்பின் R- எண்ணை உள்ளிடவும். நீங்கள் அதை BIS ஸ்டாண்டர்ட் குறியீட்டின் கீழும் காணலாம்.


6.  Verify R-no என்பதைக் கிளிக் செய்த பின், தோன்றும் அடுத்த பக்கத்தில்  உங்கள் எலக்ட்ரானிக் சாதனத்தின் உற்பத்தியாளர் பெயர், நாடு, பிராண்ட் போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.


இதன் மூலம், நீங்கள் வாங்கிய எலக்ட்ரானிக் சாதனம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.


மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ