நாட்டில் போலி ரூபாய் தாள்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் போலி ரூபாய் தாள்கள் மற்றும் உண்மையான ரூபாய் தாள்களை மக்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2020 - 21 ஆம் நிதியாண்டில் சுமார் 5.45 கோடி ரூபாய் போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதாவது, 2,08, 625 போலி நோட்டுகள் கைப்பற்றியதாக கூறியுள்ள ரிசர்வ், அவற்றில் 100 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வெறும் ரூ. 2,560 கட்டி iPhone 13-ஐ வாங்கலாம்: அசத்தும் Flipkart Electronics Sale


ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துவது 100 ரூபாய் தாள் என்பதால், அதனை குறிவைத்து மோசடி கும்பல் கள்ள நோட்டுகளை சந்தையில் இறக்குவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அண்மையில், மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனால், கள்ள நோட்டு கும்பலின் சூழ்ச்சிக்கு நீங்கள் இரையாகாமல் இருக்க வேண்டும் என்றால், போலி ரூபாய் தாள்களை அடையாளம் கண்டுகொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 


ALSO READ | குறைவான கதிர்வீச்சை வெளியிடும் பாதுகாப்பான ஸ்மார்ட்போன்கள்


நல்ல ரூபாய் தாள்களின் இருபுறத்திலும் தேவநாகரி எழுத்தில் 100 என்பது எழுதப்பட்டிருகும். ரூபாய் தாளின் நடுவே மகாத்மாக காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். 100 ரூபாய் தாள் என்றால் RBI, India மற்றும் 100 என்பவை சிறிய எழுத்துகளில் எழுதியிருக்கும். மேலும், ரிசர்வ் வங்கியின் முத்திரை, வாக்குறுதி, அசோகத்தூண், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து மற்றும் பார்வையற்றோருக்கான அடையாளச் சின்னம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும். 


200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில், அவற்றின் மதிப்பு நிறம் மாறும் மையால் எழுதப்பட்டுள்ளது. நோட்டைத் தட்டையாக வைத்திருக்கும் போது, ​​இந்த இலக்கங்களின் நிறம் பச்சையாகத் தோன்றும். சிறிது சுழற்றும்போது அது நீலமாக மாறும். ஏதாவதொரு ஒளி முன்பு ரூபாய் தாளை வைத்து பார்த்தால் மகாத்மாவின் புகைப்படம் லேசாக தெரியும். பழைய நோட்டுகளுடன் ஒப்பிடும்போது ஆளுநரின் கையெழுத்து, வாக்குறுதி, ரிசர்வ் வங்கி லோகோ உள்ளிட்டவை வலது புறத்தில் இடம்பெற்றிருக்கும். 10, 20 மற்றும் 50 ரூபாய் தாள்களில் வெள்ளி நிறத்திலான இழை ஒன்றும் நோட்டின் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். வெயிலில் அந்த இழையை காண்பித்தால் மஞ்சள் நிறத்தில் தெரியும். இந்த அடையாளங்களைக் கொண்டு கள்ள நோட்டுகளையும், நல்ல நோட்டுகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR