திருடப்பட்ட கார்களை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டுபிடிப்பது எப்படி?
தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் கார்கள் திருடபட்டால் அவற்றை எளிமையாக கண்டுபிடிக்க பல்வேறு வழிகள் உள்ளன.
கார் வாங்குவது என்பது மிடில் கிளாஸ் மற்றும் ஏழை மக்களின் வாழ் நாள் கனவாக இருக்கிறது. அப்படி ஆசை ஆசையாக பணத்தை சேர்த்து வாங்கும் கார்கள் திருடப்பட்டுவிட்டால் என்ன செய்வது?. கார் வாங்கும் ஆசையில் இருப்பவர்கள் கார் பராமரிப்பு விஷயங்களை தெரிந்து கொள்வது போலவே இந்த விஷயங்களை முன்கூடிட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப தொழில்நுட்பங்களை காரில் பராமரிக்க வேண்டும்.
மேலும் படிக்க | EV6 Launch of KIA: இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே விற்பனைக்கு
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், திருடனும் புத்திசாலிதான். திருடும்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சில அடிப்படையான விஷயங்களையும் கட்டாயம் செய்துவிடுவார்கள். அதேநேரத்தில் ஏதேனும் ஒரே ஒரு தவறை அல்லது வழியை பதட்டத்தில் விட்டுவிடுவார்கள். அதனை சரியாக கண்டுபிடித்து நீங்கள் அவர்களை ஃபாலோ செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். உதாரணமாக உங்கள் காரில் ஜிபிஎஸ் இருந்தாலும் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருடிய கார்களில் இருக்கும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கண்காணிப்பு சாதனங்களை திருடியவுடன் அவர்கள் உடனே ஆஃப் செய்துவிடுவார்கள்.
அத்தகைய நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?. காரில் நீங்கள் உங்கள் செல்போன்களை விட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை நீங்கள் செல்போனை விட்டிருந்தால் அதன் மூலம் நீங்கள் உங்கள் காரை கண்காணித்து கண்டுபிடித்துவிடலாம். செல்போனும் ஆஃப் செய்யப்படும்போது, டோல்கேட் டிடெக்டர் மூலம் உங்களது காரை கண்காணிக்க முடியும். கடைசியாக எந்த சுங்கச்சாவடியை கார் கடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
ஜிபிஎஸ் இல்லாத மற்ற தொழில்நுட்பங்களை உங்கள் காரில் நிறுவ வேண்டியது அவசியம். இதற்கு அடுத்த வழி, ஏற்கனவே சாலையோரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களைக் கொண்டு கண்காணிக்கலாம். மிக முக்கியமான விஷயம், உங்களது கார் திருடப்பட்டது குறித்து காவல்துறைக்கு நீங்கள் சொல்ல வேண்டும். அவர்கள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் படிக்க | ரெட்மீ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.749-க்கு வாங்குவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR