Pulsar, Duke பைக்குடன் மோத வரும் ஹீரோவின் புதிய பைக்... லீக்கான புகைப்படம்
Automobile News: ஹீரோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக், சந்தையில் முன்னணியில் இருக்கும் பல பைக்குகளுக்கு கடும் போட்டியளிக்கும் என கணிக்கப்படுகிறது.
Automobile News: ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் 125சிசி பிரிவில் புதிய பைக் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக் தொடர்பான பல தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. இப்போது வரவிருக்கும் இந்த பைக்கின் படமும் வெளியாகி உள்ளது. அதில் அதன் ஃபர்ஸ்ட் லுக்கை காண முடிகிறது. இருப்பினும், பைக்கின் ரிலீஸ் தேதி மற்றும் அதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவர இல்லை. இந்த பைக்கை ஹீரோ தனது மேவ்ரிக் 440 உடன் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
Hero Xtreme 125R முக்கிய அம்சங்கள்
ஹீரோ Xtreme 125R இந்தியாவில் வெளியிடப்படலாம். தற்போது கசிந்த அதன் புகைப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு ஸ்போர்டி மாடல் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். இதன் LED ஹெட்லேம்ப் மிகவும் நேர்த்தியானது. இது தவிர, பைக்கில் பிளவுபட்ட இருக்கைகள் மற்றும் மெல்லிய பின்பகுதி கிடைக்கும் என நம்பலாம்.
ஹீரோவின் வரவிருக்கும் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருக்கும். பின்புறத்தில் மோனோஷாக் ஃபோர்க் கிடைக்கும். இதன் எக்ஸாஸ்ட் மற்றும் சேஸ் Xtreme 160R போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | டாப் 5ஜி மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி ஆஃபர்.. இப்போது விற்பனையில்
Xtreme 125R எஞ்சின்
மேலும் ஹீரோ Xtreme 125R மாடலில், 125சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படும் என்று இதுவரை வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இருக்கும் TVS Raider 125, Honda SP 125, Bajaj Pulsar NS125 மற்றும் KTM 125 Duke போன்ற பைக்குகளுக்கு இது மிகப்பெரிய போட்டியை இது கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
எப்போது தொடங்கப்படும்?
ஹீரோ Extreme 125R பைக்கின் ரிலீஸ் தேதி, வேரியண்ட், அதன் விலை அல்லது முக்கிய அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
ஹீரோ மாவ்ரிக் விவரங்கள்
ஹீரோ மேவ்ரிக் வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த பைக் Harley-Davidson X440 அடிப்படையிலானதாக இருக்கும். இதன் காரணமாக, இதன் வடிவமைப்பும் X440 போன்று இருக்கும். இது H- வடிவ LED DRL உடன் வழங்கப்படும் மற்றும் இது வட்ட வடிவ ரியர்வியூ கண்ணாடிகளைக் கொண்டிருக்கும். பைக்கில் 3.5-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருக்கும் என கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். வழிசெலுத்தல் மற்றும் அழைப்பு-செய்தி அறிவிப்பு இதில் கிடைக்கும்.
ஹீரோவின் புதிய பைக்கில் 17 இன்ச் ரிம்கள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் 440சிசி ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இருக்கும். இது 27 php பவரையும், 38 Nm டார்க்கையும் உருவாக்கும். மேலும் இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும். இதன் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் படிக்க | லேப்டாப் ரொம்ப சூடாகுதா... இவை தான் முக்கிய காரணம் - என்ன தீர்வு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ